நீங்கள் விஞ்ஞானியா... அப்படின்னா உணவு தொழிற்நுட்ப ஆராய்ச்சி மையத்தில் வேலை...!!

Posted By:

சென்னை: விஞ்ஞானி பணியிடங்கள் சென்னையில் செயல்பட்டு வரும் உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தில் காத்திருக்கின்றன.

தகுதியும், திறமையும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்யலாம்.

நீங்கள் விஞ்ஞானியா... அப்படின்னா உணவு தொழிற்நுட்ப ஆராய்ச்சி மையத்தில் வேலை...!!

சயின்ஸ்டிஸ்ட் கிரேட் 4 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் செய்ய முடியும். மொத்தம் 20 பணியிடங்கள் காலியாகவுள்ளன.

பணியிடங்களுக்கான தகுதி: Computer Science, IT, Civil Engineering பாடப்பிரிவில் BE அல்லது B.Tech.பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது Chemistry, Biotechnology, Molecular Biology,Immunology

பாடப்பிரிவில் Ph.D. பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது Food Science, Food Technology பாடப்பிரிவில் M.Sc. பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 வசூலிக்கப்படும். இதனை Director. CSIR-CFTRI என்ற பெயரில் மைசூரில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.

http://www.cftri.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி மார்ச் 31 ஆகும்.

English summary
Central Food Technical Research Institute has invite applications from scientist ofr the post of scientist grade iv. For more details aspiratns can logon into www.cftri.com

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia