சணல் ஆராய்ச்சி மையத்தில் அருமையான வேலைவாய்ப்புகள்

Posted By:

சென்னை: மேற்கு வங்க மாநிலத்திலுள்ள சணல் ஆராய்ச்சி மையத்தில் (Central Research Institute for Jute & Allied Fibres) பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பணியிடங்களுக்கு தகுதியும், திறமையும் வாய்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சணல் ஆராய்ச்சி மையத்தில் அருமையான வேலைவாய்ப்புகள்

மொத்தம் 20 பணியிடங்கள் காலியாகவுள்ளன. டெக்னிக்கல் அசிஸ்டெண்ட் பிரிவில் இந்தப் பணியிடங்கள் காலியாகவுள்ளன.

இந்தப் பணியிடங்களுக்கு Agriculture அல்லது Agriculture சம்மந்தமான Science, Social Science பாடப்பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

இதற்கு விண்ணப்பிக்க ரூ.500-ஐ கட்டணமாக செலுத்தவேண்டும். மேலும் இதை "ICAR-UNITCRIJAF" என்ற பெயரில் கொல்கத்தாவில் மாற்றத்தக்க வகையில் கேட்புக் காசோலையாக(டி.டி.) எடுத்து செலுத்த வேண்டும்.

www.crijaf.org.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களில் அட்டெஸ்ட் பெற்று இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

எழுத்துத் தேர்வு, தட்டச்சு திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை The Director, ICAR-Central Research Institute for Jute & Allied Fibres, Barrackpore, Kolkata - 700 120, West Bengal என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 23.01.2016

கல்வித் தகுதி, வயதுச் சலுகை உள்ளிட்ட கூடுதல் விவரங்களுக்கு www.crijaf.org.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

English summary
Central Research Institute for Jute & Allied Fibres has invited applications for the Technical assistants in the institute. For more details aspirants can logon into www.crijaf.org.in

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia