கனரா வங்கியில் முதன்மை வாடிக்கையாளர் சேவைப் பணி!

Posted By:

சென்னை: கனரா வங்கியில் முதன்மை வாடிக்கையாளர் சேவைப் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

முதன்மை வாடிக்கையாளர் சேவை அதிகாரி என்ற பணிக்கு ஆள்தேர்வு நடைபெறவுள்ள து. ஏதாவது வர்த்தக வங்கியில் (கனரா வங்கி தவிர்த்து) பொது மேலாளராக அல்லது துணைப் பொது மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றிருக்கவேண்டும். விண்ணப்பிக்கும் நகர் தாமாகவே முன்வந்து ஓய்வுபெற்றிருத்தல் வேண்டும் அல்லது 58 வயதாகி ஓய்வு பெற்றிருக்கவேண்டும். ஒப்பந்த அடிப்படையில் பணி வாய்ப்பு இருக்கும்.

கனரா வங்கியில் முதன்மை வாடிக்கையாளர் சேவைப் பணி!

2015 ஜூலை 1ம் தேதி நிலவரப்படி வயது 61-ஐத் தாண்டியிருக்கக் கூடாது.

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் வங்கி தேர்வுக் குழு இந்தப் பணிக்குத் தேர்வு செய்யப்படுவர்.

ஒரேயொரு பணியிடம் மட்டுமே காலியாகவுள்ளது.

இந்தப் பணியிடத்துக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள், Canara Bank, Recruitment Cell, Human Resources Wing, Head Office, 112, J C Road, Bangalore-560002, Karnataka என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை ஆகஸ்ட் 8-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும். ஆன்-லைன் மூலமாகவும் விண்ணப்பங்களை அனுப்பலாம்.

மேலும் விவரங்களுக்கு கனரா வங்கியின் http://www.canarabank.com/English/Home.aspx என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

English summary
Canara bank has notified that it will be recruiting for the post of Chief Customer Service. This will be done on contractual basis. Interested and eligible candidates can apply online on or before 8th August, 2015.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia