அந்தமான் கப்பல் கட்டும் நிறுவனத்தில் டிரேட்ஸ்மேன் பணியிடங்கள்!!

Posted By:

சென்னை: அந்தமான் யூனியன் பிரதேசத்திலுள்ள கப்பல் கட்டும் நிறுவனத்தில் டிரேட்ஸ்மேன் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த நிறுவனம் அந்தமான் தலைநகர் போர்ட் பிளேயரில் செயல்பட்டு வருகிறது. இது இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பல் கட்டும் தொழிற்சாலை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வேலை இடங்களுக்கு ஐடிஐ முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அந்தமான் கப்பல் கட்டும் நிறுவனத்தில் டிரேட்ஸ்மேன் பணியிடங்கள்!!

காலியாகவுள்ள மொத்த இடங்கள் 151 ஆகும்.

பணி விவரம்: Tradesman (Skilled) Tradesman Mate.. இவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.5,200 - 20,200 என்ற அடிப்படையில் வழங்கப்படும். வயதுவரம்பு 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும்.

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட தொழிற்பிரிவில் ITI படிப்பை முடித்து NCVT சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, தொழிற்திறன் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை The Commodores Superintendent (O.ic Recruitment Cell), Naval Ship Repair Yard, Haddo, Port Blair - 744 102 என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும்.

விண்ணப்பங்கள் அடுத்த ஆண்டு ஜனவரி 4-ம் தேதிக்குள் வந்து சேரவேண்டும்.

English summary
Tradesman Recruitment will be held in Andaman Naval Ship Repair Yard. Aspirants can sent the applicats to The Commodores Superintendent (O.ic Recruitment Cell), Naval Ship Repair Yard, Haddo, Port Blair - 744 102.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia