டிகிரி முடிச்சவரா நீங்க.. ஆர்.பி.எஸ். வங்கியில் சூப்பர் வேலை இருக்கு பாஸ்..!

Posted By:

சென்னை : ராயல் பாங்க் ஆப் ஸ்காட்லாந்து வங்கி நடததும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் 2015 மற்றும் 2016 வருடம் பட்டப் படிப்பு முடித்தவர்களாக இருக்க வேண்டும்.

ராயல் பாங்க் ஆப் ஸ்காட்லாந்து நேர்முகத் தேர்வு விபரம் -

டிகிரி முடிச்சவரா நீங்க.. ஆர்.பி.எஸ். வங்கியில் சூப்பர் வேலை இருக்கு பாஸ்..!

வேலை - அனலிஸ்ட்

தகுதி - ஏதேனும் பட்டப்படிப்பு

பேட்ஜ் - 2015, 2016 வருடம் பட்டப்படிப்பு முடித்தவர்கள்

அனுபவம் - பிரசர்ஸ்

தேதி - 18 மார்ச் 2017

இடம் - சென்னை

விரிவான தகுதிகள் -

2015, 2016ம் ஆண்டு பட்டப்படிப்பினை முடித்திருக்க வேண்டும்.

பொறியியல், ஐடி சம்பந்தப்பட்ட படிப்புகள் மற்றும் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் ஆகியோருக்கு நேர்முகத் தேர்விற்கு அனுமதி கிடையாது.

நேர்முகத் தேர்வில் பங்குபெறும் பட்டதாரிகள் எல்லா சூழ்நிலையிலும் திறமையாக பணியாற்றும் திறன் உடையவராக இருக்க வேண்டும்.

பிரச்சனைகள் ஏதும் ஏற்பட்டாலும் தர்க்கரீதியான அணுகு முறையைக் கையாண்டு சிக்கல்களைத் தீர்க்கும் வலுப்பெற்றவர்களாக இருக்க வேண்டும். மேலும் பிரச்சனை வருவதற்கான மூல காரணம் என்ன என்பதைக் கண்டுபிடித்து மீண்டும் அதே பிரச்சனை வராமல் தடுக்கும் திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.

மொழித் தொடபு திறன் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

கொடுக்கப்பட்ட வேலையை சரியான நேரத்திற்குள் செய்து முடிக்கும் திறமை உடையவராக இருத்தல் அவசியமாகும்.

செய்யும் செயலில் முழு ஆர்வம் உடையவராகவும் அக்கறை உடையவராகவும் இருக்க வேண்டும்.

வேலையை துல்லியமாக செய்ய வேண்டும். எந்தவித சர்ச்சையும் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

என்னென்ன தேவைகள் உள்ளன என்பதைப் புரிந்து கொண்டு அதற்கேற்றாற் போல் வேலை செய்பவராக இருக்க வேண்டும்.

எந்தவித தவறுகளும் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அனைவருடனும் சுமூகமான நட்புறவோடு வேலை ஸ்தளத்தில் பழகுபவராக இருக்க வேண்டும்.

நேர்முகத்தேர்வு நடைபெறும் முகவரி

ஆர்.பி.எஸ் பிசினஸ் சர்வீஸஸ் பிரைவேட் லிமிடெட்,
ஒலிம்பியா டெக்னாலஜி பார்க்,
8 வது மாடி, போர்ட்டஸ் பிளாக், கிண்டி,
சென்னை - 600032

மேலும் தகவல்களுக்கு இணையதளத்தைப் பார்க்கவும்.

English summary
RBS Walk-in Drive scheduled for the role of Analyst at Chennai on Saturday 18th March, 2017.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia