ரிசர்வ் வங்கியில் கிரேடு பி அதிகாரிகள் பணியிடங்களுக்கு 161 பேர் தேவை!

Posted By:

சென்னை : ஆர்பிஐ வங்கியில் உள்ள கிரேடு பி தரத்திலான அதிகாரிகள் பணிக்கு 161 காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. பட்டதாரிகள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

ஆர்பிஐ வங்கியில் உள்ள அதிகாரி பணியிடங்கள் பற்றிய விரிவான தகவல்கள்

வேலை - அதிகாரிகள் கிரேடு பி
கல்வித்தகுதி - ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு
மொத்த காலியிடங்கள் - 161
ஊதியம் - ரூ. 35,150/- முதல் 62, 400/- வரை
பணியிடம் - இந்தயா முழுவதும்
கடைசி தேதி - 23 மே 2017

ரிசர்வ் வங்கியில் கிரேடு பி அதிகாரிகள் பணியிடங்களுக்கு 161 பேர் தேவை!

அதிகாரிகள் கிரேடு பி (டிஆர்) - ஜெனரல்

பொதுபிரிவைச் சார்ந்தவர் 60% மார்க்குகளுடன் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் 50% மார்க்குகளுடன் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, பட்டப்படிப்பு என்ற கல்விமுறையில் கற்றிருத்தல் வேண்டும்.
அல்லது 10ம் வகுப்பு, டிப்ளமோ, பட்டப்படிப்பு என்ற கல்விமுறையில் கற்றவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

அதிகாரிகள் கிரேடு பி (டிஆர்) - டிஇபிஆர்

பொருளாதாரம், அளவு பொருளாதாரவியல், கணிதவியல் பொருளாதாரம், ஒருங்கிணைந்த பொருளியல் பாடநெறி / நிதி, போன்றவற்றில் முதுகலை பட்டப்டிப்பில் 55% மார்க்குகளுடன் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். அங்கீகரிக்கப்பட்ட இந்திய அல்லது வெளிநாட்டு பல்கலைக்கழகத்தில் அனைத்து செமஸ்டர்களிலும் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அதிகாரிகள் கிரேடு பி (டிஆர்) - டிஎஸ்ஐஎம்

புள்ளிவிவரம், கணித புள்ளிவிவரம், கணித பொருளியல், பொருளியல், புள்ளியியல் மற்றும் தகவல் ஆகிய பாடங்களில் முதுகலைப்பட்டம் ஐஐடி-கராக்பூரில் பெற்றிருத்தல் வேண்டும், பயன்பாட்டு புள்ளிவிபரங்கள் மற்றும் தகவல்கள் படிப்பில் முதுகலைப்பட்டம் ஐஐடி பாம்பேயில் பெற்றிருத்தல் வேண்டும். குறைந்தது 55% மதிப்பெண்கள் அல்லது அனைத்து செமஸ்டர்களிலும் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம்.

கணிதத்தில் மாஸ்டர் பட்டம் 55 சதவிகித மதிப்பெண்களுடன் அல்லது அனைத்து செமஸ்டர்களிலும் நல்ல மதிப்பெண்களுடன் பெற்றிருத்தல் வேண்டும்.

எம். எஸ்டிஏடி படிப்பில். குறைந்தபட்சம் 55 சதவிகித மதிப்பெண்களுடன் இந்திய புள்ளிவிவர நிறுவனத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பிசினஸ் அனலிட்டிக்ஸ் பட்டதாரி டிப்ளமோ படிப்பில் ஐ.எஸ்.ஐ கொல்கத்தா, ஐ.ஐ.டி காரக்பூர் மற்றும் ஐ.ஐ.எம் கல்கத்தா ஆகியவற்றின் கூட்டுப்பணியில் குறைந்தபட்சம் 55 சதவிகித மதிப்பெண்களுடன் அல்லது அனைத்து செமஸ்டர்களிலும் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

வயது வரம்பு - 21 முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை - ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்க்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பக்கட்டணம் - பொது பிரிவு மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ. 850/- வசூலிக்கப்படுகிறது. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 100/- விண்ணப்பக்கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆர்பிஐ ஊழியர்களுக்குக் கட்டணம் ஏதும் கிடையாது.

முக்கிய தேதிகள்

விண்ணப்பிக்க கடைசி தேதி - 23 மே 2017

பேஸ் 1 ஆன்லைன் தேர்வு - 17 ஜூன் 2017

பேஸ் 2 ஆன்லைன் தேர்வு - 7 ஜூலை 2017

மேலும் விரிவான தகவல்களுக்கு https://opportunities.rbi.org.in என்ற இணையதள முகவரியை அனுகவும்.

English summary
RBI Recruitment 2017 for the post of Officers Grade-B for Reserve Bank of India branches across India.161 Vacancies, Last Date 23 May 2017.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia