சென்னை: பிஎச்.டி. படிக்க விரும்பும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி உதவவுள்ளது.
பொருளாதாரம், நிதி, வங்கி தொடர்பான துறைகளில் பிஎச்.டி படிக்க விரும்பும் மாணவர்களுக்கு ஆராய்ச்சி இன்டர்ன்ஷிப் திட்டத்தின் கீழ் உதவ ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.

இந்தத் திட்டத்தில் நிதியுதவி பெற மாணவர்கள் பட்டப்படிப்பை முடித்திருக்கவேண்டும் அல்லது 4 ஆண்டு பி.இ., பி.டெக் படித்திருக்கவேண்டும். இந்தப் படிப்பு படித்தவர்கள் இந்த இன்டர்ன்ஷிப் திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.
இந்த இன்டர்ன்ஷிப் திட்டத்தில் சேர உங்களது சுயவிவரங்களை அனுப்பவேண்டும். இன்தத் திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் மாணவர்களை ரிசர்வ் வங்கி தேர்வு செய்யும்.
இந்த இன்டர்ன்ஷிப் காலம் 6 மாதமாகும். இதன்மூலம் மாதம்தோறும் ரூ.35 ஆயிரம் ஸ்டைபண்டாகக் கிடைக்கும்.
மேலும் விவரங்களுக்கு https://www.rbi.org.in/ என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம்.


Click it and Unblock the Notifications
