இளநிலைப் பொறியாளர்களே... ரிசர்வ் வங்கியில் பணியாற்ற வேண்டுமா? இதோ வாய்ப்பு!

Posted By:

சென்னை: இந்திய ரிசர்வ் வங்கியில் இளநிலைப் பொறியாளர்கள் பணியாற்ற அருமையான வாய்ப்புக் கிைத்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியில் நிரப்பப்பட உள்ள இளநிலை பொறியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதிக சம்பளம், பணி நிரந்தரம், அருமையான எதிர்காலத்தை இந்தப் பணியிடம் அமைத்துத் தருகிறது ரிசர்வ் வங்கி.

இளநிலைப் பொறியாளர்களே... ரிசர்வ் வங்கியில் பணியாற்ற வேண்டுமா? இதோ வாய்ப்பு!

பணியிடங்கள் விவரம்:

பணி: இளநிலை பொறியாளர் (சிவில், எலக்ட்ரிக்கல்)
மண்டலம் வாரியான காலியிடங்கள் விவரம்:
இளநிலை பொறியாளர் (சிவில்):
மேற்கு - 06
தெற்கு - 02

மத்திய - 03

இளநிலை பொறியாளர் (எலக்ட்ரிக்கல்):

கிழக்கு - 02

மேற்கு - 07
தெற்கு - 01
மத்திய - 02

தெற்கு மண்டலம்: தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகம், கேரளம்.

இந்தப் பணியில் சேர்வதற்கு வயது வரம்பு 20 முதல் 30-க்குள் இருக்கவேண்டும். அதாவது 060-06-1985 முதல் 05-06-1995- ஆகிய காலகட்டத்துக்குள் பிறந்திருக்க வேண்டும்.

சிவில், எலக்ட்ரிக்கல் துறையில் 3 ஆண்டு பொறியியல் பட்டயப் படிப்பு அல்லது பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் இந்தப் பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்படுவார்கள்.

இந்தப் பணியிடங்களுக்கான விண்ணப்பம் செய்ய கடைசி தேதி வரும் ஜன் 26 ஆகும்.
காலம் குறைவாகவே இருப்பதால் தகுதி உள்ள என்ஜினியர்கள் உடனடியாக விண்ணப்பித்தல் நலம்.

இதற்கான ஆன்லைன் எழுத்துத் தேர்வு ஜூலை 5-ம் தேதி நடைபெறவுள்ளது.
https://opportunities.rbi.org.in/Scripts/bs_viewcontent.aspx?Id=3020 என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் தகுதி உடையோர் விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு www.rbi.org.in என்ற இணையதளத்தை தொடர்புகொள்ளலாம். இதில் முழுமையான விவரங்களை அறிந்துகொண்டு அதற்கேற்ப விண்ணப்பிக்க முடியும்.

English summary
The Reserve Bank of India invites applications from eligible candidates for posts of Junior Engineer – Civil (11 posts) and Junior Engineer – Electrical (12 posts) in various offices of the Bank. Selection for the post will be through a country-wide competitive Online Examination and Interview. The full text of advertisement is available on the Banks’ website (www.rbi.org.in) and is also being published in theEmployment News / Rozgar Samachar on or after June 05, 2015. Applications will be accepted only online through Banks’ website.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia