பிஎச்டி முடித்தவர்களுக்கு ரிசர்வ் வங்கியில் 134 பணியிடங்கள்!

Posted By:

சென்னை: இந்திய ரிசர்வ் வங்கியில் அலுவலர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியில் கிரேட் பி பிரிவில் 134 பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. இந்தப் பணியிடங்களுக்கு அக்டோபர் 23-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 10, 12-வது முடித்து பட்டப்படிப்பில் 60 சதவீத தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதுமானது.

பிஎச்டி முடித்தவர்களுக்கு ரிசர்வ் வங்கியில் 134 பணியிடங்கள்!

வயது 21-க்குள் இருந்து 30-க்குள் இருக்கவேண்டும். எம்.பில் படித்தவர்களுக்கு 32 வயதும், பிஎச்.டி. முடித்தவர்கள் 34 வயதும் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த பணியிடத்துக்கானத் தேர்வு ஆன்-லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் இருக்கும்.

முதல் கட்டத் தேர்வு ஆன்-லைனில் இருக்கும். 200 மதிப்பெண்களுக்கான இந்தத் தேர்வு நவம்பர் 21, 22 தேதிகளில் நடைபெறும். இதைத் தொடர்ந்து 2-வது கட்டத் தேர்வு நடைபெறும்.

இதில் வெற்றி பெற்று தேர்வானவர்கள் விவரம் வெளியிடப்படும்.

விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி அக்டோபர் 23 ஆகும். முதல் கட்டத் தேர்வு நவம்பர் 21, 22-ம் தேதிகளிலும், 2-ம் கட்டத் தேர்வு டிசம்பர் 7-ம் தேதியும் நடைபெறும்.

மேலும் விவரங்களுக்கு https://www.rbi.org.in என்ற இணையதள முகவரியைப் பார்க்கலாம்.

English summary
Reserve Bank of India (RBI) invited applications for 134 officers in Grade ‘B' post. The eligible candidates can apply to the post through the prescribed format on or before 23 October 2015. RBI Vacancy Details Officers in Grade ‘B' (General): 134. 1. Gen/UR: 67 2. SC: 15 3. ST: 13 4. OBC: 39 Eligibility Criteria for Officers in Grade ‘B' Job Educational Qualification: A minimum of 60% marks (50% in case of SC/ST/PWD) or an equivalent grade in Bachelor's degree as well as in 12th and 10th standard examinations.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia