எம்பிபிஎஸ் தரவரிசைப் பட்டியல் வெளியீடு: 17 பேர் முதலிடம்!

Posted By:

சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கு விண்ணப்பித்தவர்களுக்கு தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதில் 17 மாணவர்கள் முதலிடம் பிடித்துள்ளனர்.

தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கு 31,332 மாணவ- மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். ஆனால், 20 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 2,257 இடங்கள்தான் உள்ளன.

எம்பிபிஎஸ் தரவரிசைப் பட்டியல் வெளியீடு: 17 பேர் முதலிடம்!

இந்நிலையில், சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்வி இயக்ககத்தில் இன்று மாலை எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கு விண்ணப்பித்தவர்களுக்கு தரவரிசை பட்டியலை அமைச்சர் விஜய பாஸ்கர் வெளியிட்டார்.

இதில் 200க்கு 200 கட் ஆப் மதிப்பெண் எடுத்து 17 மாணவர்கள் முதலிடம் பிடித்துள்ளனர்.

முதல் ரேங்கை நிஷாந்த் ராஜனும், 2வது ரேங்கை முகேஷ் கண்ணனும், 3வது ரேங்கை பிரவீனும் பிடித்துள்ளனர்.

4வது ரேங்கை நிவாஷூம், 5வது ரேங்கை சரவணக்குமாரும், 6வது ரேங்கை கவுதம ராஜும், 7வது ரேங்கை மோதி ஸ்ரீயும், 8வது ரேங்கை திராவிடனும், 9வது ரேங்கை பிரவீன் குமாரும் பிடித்துள்ளனர்.

10வது ரேங்க் பைஸூவுக்கும், 11வது ரேங்க் சுரண் ராமுக்கும், 12வது ரேங்க் ரேணுகாவுக்கும் கிடைத்துள்ளது.

மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு வரும் 19ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

English summary
The Ranking list of students those applied for MBBS in govt colleges has been released today.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia