மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் தயார்நிலையில் உள்ளன

Posted By:

தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர்களுக்கான தரவரிசை தயார் நிலையில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது . தமிழ்நாட்டில் மருத்துவ கலந்தாய்வுக்கான பிளஸ்2 மற்றும் நீட் தேர்வுகளில் பெற்ற மதிபெண்கள் அடிப்படையில் தரவரிசை பிரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர் .

மருத்துவ கலந்தாய்வுக்கு மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடு

தமிழகத்தில் மொத்தம் 22 அரசு மருத்துவ கல்லுரிகள் உள்ளன. 22 அரசு மருத்துவ கல்லுரிகளில் 2593 இடங்கள் உள்ளன. 11 சுயநிதி மருத்துவ கல்லுரிகளில் இருந்து அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மொத்தம் 783 இடங்கள் இருக்கின்றன. அரசு பல் மருத்துவ கம்பெனிகளில் 610 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன .

நீட் தேர்வு பிரச்சனை தொடர்பாக மருத்துவ கவுன்சிலிங் மிகுந்த தாமதம் ஆகின்றது. ஆனால் இந்த நீட் தேர்வுக்குப் பின் மருத்துவ படிப்பிற்கான விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டன. 55ஆயிரம் பேர் மருத்துவ படிப்புக்காக விண்ணப்பித்துள்ளனர்.

நீட்தேர்வு முடிந்தபின் மாணவர்களுக்கான சேர்க்கை பிளஸ் 2 மதிபெண் முறையிலா அல்லது நீட் தேர்வு மதிபெண் முறையிலா என்ற என்ற கேள்வியும் குழப்பமும் மாணவர்கள் பெற்றவர்கள் மத்தியில் எழுந்தவண்ணமே உள்ளன . மருத்துவ மாணவர்களுக்கான எந்த முடிவும் அரசும் எடுக்க முடியாத நிலையில் உள்ளன . பிளஸ்டூ மதிபெண் முறையில் கலந்தாய்வு நடைபெற்றால் மாணவர்களுக்கான ரேண்டம் எண் வெளியிடலாம் .

நீட் தேர்வு முறையில் மாணவர்களுக்கான சேர்க்கை நடைபெற்றால் ரேண்டம் எண் தேவையில்லை . இதற்கிடையில் அதிகாரிகள் பிளஸ் 2மதிபெண் அடிப்படையிலும் , நீட் தேர்வு மதிபெண் அடிப்படையிலும் தரவரிசைப் பட்டியல் தயார் செய்து வைத்துள்ளனர் என்ற தகவல் கிடைத்துள்ளது .

நீட்தேர்வுக்கு தமிழ அரசு விலக்குகேட்டு மத்திய அரசின் ஒப்புதல் பெற்றுள்ளது . அத்துடன் தமிழகம் நீட் தேர்வு குறித்து உச்சநீதி மன்றத்தில் வழக்கும் தொடுத்துள்ளது . மாணவர்களுக்கான கலந்தாய்வு நடத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுக்கின்ற போதிலும் இன்னும் தெளிவான முடிவு கிடைக்கவில்லை . மாணவர்களுக்கான  கல்வியாண்டு தாமதாவதை மத்திய மாநில அரசுகள் புரிந்து செயல்பட வேண்டும் . 

சார்ந்த பதிவுகள்:

நீட்தேர்வு எழுதுவதிலிருந்து தமிழகத்திற்கு ஓர் ஆண்டு விலக்கு மத்திய அரசு ஒப்புதல்

மருத்துவ கவுன்சிலிங் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் நடக்குமா, ஓமந்தூர் மருத்துவமணை தயாரா

English summary
here article tell about ranking list of medical counseling

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia