வருங்கால பொறியாளர் புலிகளே... உங்களுக்கான ரேண்டம் எண் பட்டியல் இன்று ரிலீ்ஸ்!

Posted By:

சென்னை: வருங்காலத்தில் கம்ப்யூட்டர், பயோடெக்னாலஜி, மெக்கானிக், கட்டடப் பொறியாளர்களாக மாறப் போகும் மாணவர்கள் சேரப் போகும் பி.இ. படிப்புக்கான ரேண்டம் எண் பட்டியல்(சமவாய்ப்பு எண் பட்டியல்) தமிழகத்தில் இன்று ரிலீஸ் ஆகவுள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் காலை 10 மணிக்கு இந்த ரேண்டம் எண் பட்டியல் வெளியாகிறது.

வருங்கால பொறியாளர் புலிகளே... உங்களுக்கான ரேண்டம் எண் பட்டியல் இன்று ரிலீ்ஸ்!

தமிழகத்தில் 570-க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகளில் இடம்பெற்றுள்ள 1.80 லட்சம் அரசு ஒதுக்கீட்டு பி.இ, பி.டெக். இடங்களுக்கு மாணவர் சேர்க்கைக்கான சிங்கிள் விண்டோ கவுன்சிலிங்கை(ஒற்றைச் சாளரக் கலந்தாய்வ) அண்ணா பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

2015-16 கல்வியாண்டு பி.இ. மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் சுமார் 1.90 லட்சம் விநியோகமாயின. இதில் 1,54,450 பேர் மட்டுமே விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தந்துள்ளனர்.

இந்த நிலையில் இவர்களுக்கான ரேண்டம் எண் பட்டியல் இன்று வெளியாகிறது. மேலும் இந்தப் பட்டியலை www.annauniv.edu என்ற இணையதளத்திலும் பார்த்துக்கொள்ளலாம் என அதிகாரப்பூர்வமாக அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.

English summary
Random number list for B.E. B.Tech courses will be announced today. Anna university which is conducting the councelling will release the list.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia