கேஐஐடி பல்கலைக்கழகப் பணிகளுக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு

Posted By:

சென்னை: கேஐஐடி பல்கலைக்கழகப் பணிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டுத் தெரிவித்தார். கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்டஸ்டிரியல் அண்ட் டெக்னாலஜி(கேஐஐடி) பல்கலைக்கழகம் ஒடிஸா மாநிலம் புவனேஸ்வரில் அமைந்துள்ளது. இந்தப் பல்கலைக்கழகத்தின் நிறுவனராக டாக்டர் அச்சுதா சமந்தா உள்ளார்.

மேலும் கேஐஐடி-யில் வரும் வருவாயைக் கொண்டு கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல்சயின்ஸஸ் (கேஐஎஸ்எஸ்) என்ற கல்வி நிறுவனத்தையும் டாக்டர் அச்சுதா சமந்தாநடத்தி வருகிறார். இதில் 25 ஆயிரம் பழங்குடியின மக்களுக்கு இலவசக் கல்வியை அளித்து வருகிறார் அச்சுதா சமந்தா. இலவசக் கல்வி மட்டுமல்லாமல் தங்குமிடம், உணவையும் இலவசமாக அளித்து வருகிறார்.

கேஐஐடி பல்கலைக்கழகப் பணிகளுக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு

சமீபத்தில் விபத்தில் சிக்கி காயமடைந்த டாக்டர் அச்சுதா சமந்தாவை, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்தித்து நலம் விசாரித்தார். அவர் விரைவில் குணமடையவும் அவர் வாழ்த்து தெரிவித்தார்.

புவனேஸ்வரிலுள்ள மருத்துவமனையில் இந்த சந்திப்பு நடந்தது. அப்போது கேஐஐடி, கேஐஎஸ்எஸ் கல்வி நிறுவனப் பணிகளுக்கு ராஜ்நாத்சிங் பாராட்டு தெரிவித்தார். பழங்குடியின மாணவர்களின் முன்னேற்றத்துக்காக அவர் எடுத்து வரும் நடவடிக்கைகள் மிகவும் போற்றுதலுக்குரியது என்றார் அவர்.

விரைவில் கேஐஎஸ்எஸ் இன்ஸ்டிடியூட்டை அவர் நேரில் பார்வையிட விரும்புவதாகவும் அப்போது டாக்டர் அச்சுதா சமந்தாவிடம் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

English summary
Union Home Minister Rajanath Singh paid a visit to enquire the health of KIIT & KISS founder Dr Achyuta Samanta at Bhubaneswar on Friday.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia