மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறையளிக்க தலைமை ஆசிரியர்கள் முடிவெடுக்கலாம்

Posted By:

மழை காரணமாக விடுமுறை அளிக்கும் உரிமையை தலைமை ஆசிரியர்களுக்கு வழங்க உரிமை அளிக்கப்பட்டுள்ளது. மழைகாரணமாக சென்னையில் விடுமுறை பள்ளிகளுக்கு அறிவிக்கும் அதிகாரத்தை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்க அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் மழைக்கால விடுமுறையை அடுத்து கடந்த திங்களில் வகுப்புகள்  தொடங்கப்பட்டது.

பள்ளிகளுக்கு விடுமுறை தலைமை ஆசிரியர்கள் முடிவெடுக்க அனுமதி

பள்ளி தலைமை ஆசிரியர்கள் மழையின் வேகத்தை பொருத்து முடிவெடுக்க மாவட்ட கல்வி ஆணையம் உரிமை வழங்கியுள்ளது. தலைமை ஆசிரியர் மற்ற ஆசிரியர்களுக்கு மழை காரணமாக விடுப்பு செய்தியை அனுப்பலாம் . ஆசிரியர்கள் விடுப்பு செய்தியை மாணவர்களுக்கு குறுஞ்ச்செய்தி அளிக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

மழைகாலத்தில் ஏற்படும் பள்ளிகளின் விடுமுறை குழப்பத்தை பெற்றோர் மாணவர்களிடையே தவிர்க்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இனி மாணவர்கள் எளிதில் அறிந்துகொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.கலெக்டர் ஒப்புதல் அளித்து மாணவர்களுக்கு தகவல்கள் சென்று சேர தாமதமாகின்றது இதனை தவிர்க்கவே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் பொருட்டு மாணவர்களின் பெற்றோர்களின் தொலைபேசி எண்கள் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மழையால் மோசமாக பாதிக்கப்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை தொடர்கின்றது. பணிகள் முழுமையாக முடிந்தபிறகு அவை பள்ளிகள் மீண்டும் திறக்கலாம்.

மழைகாரணமாக சென்னை மாவட்டத்தில் நடக்கவிருந்த முன்அரையாண்டு தேர்வு இரத்து செய்யப்பட்டுள்ளது.மாணவர்கள் அதிக மதிபெண் பெரும் பொருட்டு நடக்கவிருந்த முன் அரையாண்டு தேர்வுகள் இரத்து செய்யப்பட்டன.

மழையால பாதிக்கப்பட்டு புத்தகங்களை இழந்த கடலோர மாவட்டங்களுக்கு புத்தகங்கள்  வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மிகுந்த பாதிப்படைந்த  பள்ளிகளில் இந்த நடைவடிக்கை  தொடங்கப்பட்டுள்ளது. 

இவ்வறே அண்ணா பல்கலைகழகம் தேர்வை மாற்றுவது குறித்து அறிவித்துள்ளது. தனியார் கல்வி நிறுவனங்களும் விடுமுறை குறித்து அறிவித்துள்ளது.

சார்ந்த பதிவுகள்:

சென்னை பள்ளிகளில் அரையாண்டு தேர்வு இரத்து !

பள்ளிகள் இனறு முதல் திறப்பு மழைகாரணமாக கொடுக்கப்பட்ட விடுமுறை முடிவு!

English summary
here article tell about rain leave announcement for schools can take by principal of schools

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia