சென்னை ஐஐடியில் ரயில் ஆராய்ச்சி மையம்!!

Posted By:

சென்னை: நவீனமான முறையில் ரயில் போக்குவரத்து ஆராய்ச்சிகளை மேற்கொள்ள சென்னை ஐஐடி கல்வி நிலையத்தில் ரயில் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் எனத் தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக டெல்லியில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ரயில்வேயுடன் சென்னை ஐஐடி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

சென்னை ஐஐடியில் ரயில் ஆராய்ச்சி மையம்!!

இதன்படி, ரயில் ஆராய்ச்சி மையத்தில் நவீன, பாதுகாப்பான ரயில் போக்குவரத்தை அறிமுகம் செய்யும் வகையிலான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும். இதில் ஐஐடி பங்கெடுக்கும். இதற்காக பேராசிரியர்கள், ரயில்வே அதிகாரிகள் அடங்கிய திட்ட ஆலோசனைக் குழு அமைக்கப்படவுள்ளது. இந்த மையத்தில் ஆராய்ச்சியில் ஈடுபட உள்ள பேராசிரியர்களுக்கு ரயில் தொழில்நுட்பம் குறித்த பயிற்சிகள் இந்தியாவிலும், வெளிநாட்டிலும் அளிக்கப்பட உள்ளன.

மேலும், ரயில் தொழில்நுட்பத்தில் இளநிலை, முதுநிலைப் பொறியியல் படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டு மாணவர்களும் நவீன ரயில் தொழில்நுட்ப ஆராய்ச்சிகளில் ஈடுபடுத்தப்படுவர்.

ஐஐடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

English summary
Chennai IIT has made a memorandum of understanding with Indian Railways to start a Railway research center in Chennai.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia