விண்ணப்பிக்க ஓடி வாங்க....ஓடி வாங்க...! ரயில்வே துறை அழைக்கிறது!

Posted By:

சென்னை: ரயில்வே துறையில் ஏராளமான வேலைவாய்ப்புகள் இருப்பதாக ரயில்வே தேர்வாணைய மையம்(ஆர்ஆர்சி) அறிவித்துள்ளது.

குரூப் டி பிரிவில் மொத்தம் 1884 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் ஜனவரி 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.

விண்ணப்பிக்க ஓடி வாங்க....ஓடி வாங்க...! ரயில்வே துறை அழைக்கிறது!

மும்பை, அலகாபாத், ஹூப்ளி, ஜபல்பூர், புவனேஸ்வர், பிலாஸ்பூர், சென்னை, கௌஹாத்தி, கொல்கத்தா, பாட்னா, கோரக்பூர், செகந்திராபாத் ஆகிய நகரங்களில் ரயில்வேயில் பணியிடங்கள் காலியாகவுள்ளன.

இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.

எழுத்துத் தேர்வு பிப்ரவரி 15 முதல் 28-ம் தேதிக்குள் நடைபெறும்.

கல்வித் தகுதி, வயதுச் சலுகை, சம்பள விவரம் போன்ற கூடுதல் விவரங்களுக்கு http://www.indianrailways.gov.in/railwayboard/view_section.jsp?lang=0&id=0,4,1244 என்ற லிங்கைக் கிளிக் செய்யுங்கள்.

ரயில்வே துறைக்கு பணியாட்களைத் தேர்வு செய்யும் வாரியங்களில் ஒன்றுதான் ரயில்வே தேர்வாணைய மையம்(ஆர்ஆர்சி) என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Railway Recruitment Cell (RRC) notified recruitment for 1884 Group 'D' posts. Interested and eligible candidates are required to apply on or before 31 January 2016 (11.59pm). RRC had released the notification for massive vacancies for Group 'D' posts on 01 January 2016. Candidates will be selected on the basis of their performance in the written examination followed by document verification and medical test. The written examination is scheduled to be held between 15-28 February 2016.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia