அருமையான பணிகள்...அற்புதமான சாதனை.... கேஐஐடி பல்கலை.க்கு மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு பாராட்டு..!!

Posted By:

டெல்லி: அருமையான, மகத்தான பணிகளை கேஐஐடி பல்கலைக்கழகம் (கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்டஸ்டிரியல் அண்ட் டெக்னாலஜி) செய்து வருவதாக மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்தார்.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் கேஐஐடி பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. பழங்குடியின மாணவர்கள் பயில்வதற்காக கேஐஎஸ்எஸ் (கலிங்கா இன்ஸ்டிடியூட்ஆஃப் சோஷியல் சயின்ஸஸ்) என்னும் மிகவும் பெரிய பள்ளியை கேஐஐடி நடத்தி வருகிறது.

அருமையான பணிகள்...அற்புதமான சாதனை.... கேஐஐடி பல்கலை.க்கு மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு பாராட்டு..!!

இங்கு 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழங்குடியின குழந்தைகள் இலவசமாக தங்கி, கல்வி பயின்று வருகின்றனர். சமீபத்தில் கேஐஎஸ்எஸ் பள்ளிக்கு மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு வருகை தந்தார்.

அப்போது அவர் பேசியதாவது: உலகிலேயே இதுபோன்ற மிகப்பெரிய பள்ளியைப் பார்க்கிறேன். பழங்குடியின மாணவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள மிகப்பெரிய பள்ளியாகும் இது. இது எனக்கு மிகவும் சந்தோஷத்தையும், மகிழ்ச்சியையும் கொடுக்கிறது.

அருமையான பணிகள்...அற்புதமான சாதனை.... கேஐஐடி பல்கலை.க்கு மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு பாராட்டு..!!

இந்தப் பணியைச் செய்து வரும் கேஐஐடி நிறுவனர் டாக்டர் அச்சுதா சமந்தாவுக்கு எனது பாராட்டுக்கள். இங்கு பயிலும் மாணவர்கள் சிறப்பா பயின்று தங்களது திறமை வெளிக்கொண்டு வரவேண்டும். சிறப்பாக பயில்வதன் மூலம் வாழ்க்கையில் உச்சத்தை அவர்கள் அடையலாம். அதற்கு உறுதுணையாக இந்த மிகப்பெரிய இன்ஸ்டிடியூட் பணியாற்றி வருகிறது என்றார் அவர்.

அவருடன் மத்திய ரயில்வே இணை அமைச்சர் மனோஜ் சின்ஹா உள்ளிட்டோரும் வந்திருந்தனர். அவர்களை பல்கலைக்கழக வேந்தர் அச்சுதா சமந்தா வரவேற்றார்.

English summary
Minister for Railways Suresh Prabhakar Prabhu and Minister of State for Railways Manoj Sinha visited Kalinga Institute of Social Sciences (KISS) on Saturday. Addressing 25,000 tribal students of KISS, Mr. Prabhu said, I have never ever seen such a big tribal institution. I am visiting the largest tribal institution in the world for the first time. Expressing satisfaction over KISS visit he said, KISS is a noble work. One day students of KISS must bring laurels not only to KISS, but for the entire country. Tribal culture and tradition are very old. We should not ignore to our culture and tradition. Students should learn in such a way, so that they can excel in their career and can uphold their culture and tradition.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia