மதுரையில் விடைத்தாள்கள் திருத்தியதில் கவனக்குறைவாக இருந்த ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்கப்படும் என முதன்மை கல்வி அலுவலர் கோபிதாஸ் தெரிவித்துள்ளார்.
அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை ஆசிரியர்கள் திருத்திய காலாண்டுத் தேர்வு விடைத்தாள்கள் கூர்ந்தாய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இதில், அதிக மதிப்பெண் வழங்கியது, கவனக்குறைவுடன் திருத்தியது உட்பட பல்வேறு புகார்கள் பெறப்பட்டுள்ளது.
கவனக்குறைவு ஆசிரியர்களிடம் தலைமை ஆசிரியர் மூலம் விளக்கம் கேட்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், விடைத்தாளை நன்றாகத் திருத்திய ஆசிரியர்களும் பாராட்டப்படுவர்.
ஆப்பரேஷன் இ :
ஆப்பரேஷன் இ என்னும் இத்திட்டத்திற்கு நல்ல பலன் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சரியான நேரத்திற்கு ஆசிரியர்கள் பள்ளிக்கு செல்கின்றனர். இந்த ஆய்வில் 6 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களின் வாசிப்பு மற்றும் எழுதும் திறன் மேம்படும். தற்போது வரை மூன்று கல்வி ஒன்றியங்களில் ஆய்வு முடிந்துள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்து 12 ஒன்றியங்களில் செயல்படும் பள்ளிகளில் இப்பணி நடைபெறும் என முதன்மை கல்வி அலுவலர் கோபிதாஸ் தெரிவித்துள்ளார்.