பல்கலை.கள் தரவரிசையில் உலக அளவில் டெல்லி பல்கலை.க்கு 18-ஆம் இடம்!!

Posted By:

புதுடெல்லி: உலகப் பல்கலைக்கழகங்கள் தரவரிசையில் டெல்லி பல்கலைக்கழகத்துக்கு (டியூ) 18-வது இடம் கிடைத்துள்ளது.

டெவலப்மெண்ட் ஸ்டடீஸ் என்ற பிரிவில் டெல்லி பல்கலைக்கழகத்துக்கு இந்த இடம் கிடைத்துள்ளது.

ஆண்டுதோறும் கியூஎஸ் உலகப் பல்கலைக்கழகத் தரவரிசை வெளியிடப்படுகிறது. அதன்படி 2016-17-ம் ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியானது. இதில் டெல்லி பல்கலைக்கழகத்துக்கு 18-ம் இடம் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு இதே பிரிவில் டெல்லி பல்கலைக்கழகம் 17-வது இடம் பிடித்திருந்தது.

கியூஎஸ் பல்கலைக்கழகங்கள் தரவரிசை 6-வது ஆண்டாக இந்த தரவரிசையை வெளியிடுகிறது. இதில்தான் டெல்லி பல்கலைக்கழகம் முதல் 20 இடங்களுக்குள் வந்து சாதனை படைத்துள்ளது.

உலகப் பல்கலை.கள் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த 114 பல்கலைக்கழகங்கள் இடம்பிடித்துள்ளன என்பது பெருமைக்குரிய விஷயமாகும். கடந்த ஆண்டு இந்தப் பட்டியலில் 107 பல்கலைக்கழகங்கள் மட்டுமே இடம்பிடித்திருந்தன.

பம்பாய் ஐஐடி, பெங்களூரு ஐஐஎஸ்சி உள்ளிட்ட நிறுவனங்களும் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளன.

English summary
The QS World University Rankings by Subject for the year 2016-17 will be released today, according to TOI. Delhi University sits in the 18th spot in the category of 'Development Studies', and is the Indian University that has achieved highest ranking. Though the DU might have dropped a place from last year, Delhi University still ranks among the top 20 institutions for development studies in the 6th edition of the subject focused listings.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia