புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மாணவ, மாணவிகள் பி.எஸ்சி நர்சிங் படிப்பு பயில்வதற்கு சேர்க்கையானது, நுழைவுத் தேர்வு மூலம் நடத்தப்படும் என புதுச்சேரி யூனியன் பிரதேச அரசு அறிவித்துள்ளது.

முன்பு பாண்டிச்சேரி என்று அழைக்கப்பட்ட புதுச்சேரி இந்தியாவில் உள்ள யூனியன் பிரதேசங்களில் ஒன்றாகும். இந்த மாநிலத்தின் சூழல் மிகவும் அமைதியானது. மேலும் அதன் நகர்ப்புற கட்டிடக்கலை, பிரெஞ்சு பாணியை சித்தரிக்கும் வகையில் சிறப்புற அமைந்துள்ளது, உலகம் முழுவதிலுமிருந்து மக்களை புதுச்சேரியானது ஈர்க்கிறது. இவை அனைத்தையும் தவிர, புதுச்சேரி ஸ்ரீ மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரி, பாண்டிச்சேரி இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் & ரிசர்ச் போன்ற சில மதிப்புமிக்க மருத்துவக் கல்லூரிகளும் புதுச்சேரியால் அறியப்படுகிறது.

மேலும் மாநிலத்தில் கஸ்தூரிபா காந்தி நர்சிங் கல்லூரி, மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் போன்ற சில முதன்மையான நர்சிங் கல்லூரிகளும் உள்ளன. பாண்டிச்சேரியில் உள்ள இந்த சிறந்த நர்சிங் கல்லூரிகள் இந்தியாவின் சிறந்த நர்சிங் கல்லூரிகளில் ஒன்றாகும்.

புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் செவிலியர் கல்லுாரிகள் பல அமைந்துள்ளது. இந்தக் கல்லூரிகளில் பி.எஸ்சி நர்சிங் படிப்பு சிறப்பான முறையில் கற்றுத் தரப்படுகிறது. இந்த பி.எஸ்சி. நர்சிங் பட்டப் படிப்புக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது..

புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!

இந்நிலையில் கடந்தாண்டு பிஎஸ்சி நர்சிங் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்த இந்திய நர்சிங் கவுன்சில் மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளுக்கு அறிவுரையை வழங்கியது. அதனையொட்டி, இந்த ஆண்டு முதல் நுழைவுத் தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகளை சுகாதாரத்துறை செய்து வந்தது.

ஆனால், பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கு நுழைவுத் தேர்வு கூடாது என பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். நுழைவுத் தேர்வுக்கு பல்வேறு தரப்பில் இருந்து எழுந்த எதிர்ப்பால், நுழைவுத் தேர்வு நடத்தும் முடிவை புதுச்சேரி யூனியன் பிரதேச அரசு சுகாதாரத்துறை கைவிட்டு, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கையை நடத்தி முடித்துவிட்டது.

இந்நிலையில், நடப்பு 2024 - 25-ம் கல்வி ஆண்டுக்கான பி.எஸ்சி., நர்சிங் படிப்புக்கு மாணவர் சேர்க்கை நுழைவுத் தேர்வு மூலம் நடத்த துணைநிலை ஆளுநர் ராதாகிருஷ்ணன் அனுமதி அளித்துள்ளார். இதற்கான உத்தரவை சுகாதாரத்துறை சார்பு செயலாளர் முருகேசன் தற்போது வெளியிட்டுள்ளார்.

மேலும், தேர்வு மற்றும் மாணவர் சேர்க்கைக்கான பிற விதிமுறைகள் பின்னர் தனியாக வெளியிடப்படும் என்றும், தேர்வு தேதிகளானது இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் பெற்று வெளியிடப்படும் என்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Puducherry union territory Government will conduct Entrance exams for B.Sc Nursing Course in union territory Colleges and Private Institutions. From this Academic year the entrance exams will be conducted.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+