இன்று வெளியான பிளஸ்-2 தேர்வு முடிவுகளில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் கவலை அடைய வேண்டாம். அவர்களுக்குத் தேவையான மன நல ஆலோசனைகளையும், அவர்கள் அடுத்து என்ன செய்யவேண்டும் என்பதற்கான தீர்வுகளையும் தருவதற்கு தமிழக அரசு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இதற்கான பணிகளில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை ஈடுபட்டுள்ளது.
இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
இன்று காலை 9.30 மணிக்கு 2023-24-ம் கல்வியாண்டில் பிளஸ்-2 படித்த மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் ஏராளமானோர் படித்து தேர்ச்சி பெற்றுள்ளனர். சிலர் தேர்ச்சி அடைய முடியாமல் போன நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அந்த மாணவர்கள் கவலை கொள்ளவேண்டும்.
அவர்களுக்குத் தேவையான ஆலோசனையை மருத்துவம், சுகாதார நலத்துறை வழங்குள்ளது.
'104' - தொலைபேசி மருத்துவ உதவி தகவல் மையம் மற்றும் '14416' - நட்புடன் உங்களோடு மனநல சேவை மையங்கள 24 மணி நேரமும் டி.எம்.எஸ் வளாகம், தேனாம்பேட்டை, சென்னையில் செயல்பட்டு வருகிறது. 104 மருத்துவ உதவி மற்றும் தகவல் மையம் வாயிலாக பொதுமக்களுக்கு உடல் நலம் குறித்த அறிவுரைகள், மருத்துவ ஆலோசனைகள் மற்றும் மன நல ஆலோசனைகள் தேவைப்படும் பயனாளிகளுக்கு வழங்கப்படும்.

அதேபோன்று 14416 அழைப்பு மையம் (நட்புடன் உங்களோடு மன நல சேவை) மன அழுத்தத்தில் இருந்து விடுபெற்று மன நல ஆலோசனை பெறுவதற்காக உருவாக்கப்பட்டது.
தமிழக அரசின் முன்னோடி திட்டத்தின் ஒரு பகுதியாக 2020-2021 மற்றும் 2021-2022 கல்வியாண்டுகளில் நீட் தேர்வுக்கு பதிவு செய்த மாணவர்களுக்கு. 104 மருத்துவ உதவி தகவல் மையம் மூலம் 2020-2021 கல்வியாண்டில் 1,10,971, நீட் தேர்வு பதிவு செய்த மாணவர்கள்மற்றும் 2021-2022 கல்வியாண்டில் 1,45,988 நீட் தேர்வு பதிவு செய்த மாணவர்களுக்கு மன நல ஆலோசனை வழங்கப்பட்டது.
அதேபோல், தமிழகத்தில் 2022 ஆம் ஆண்டு '14416'- நட்புடன் உங்களோடு மனநல சேவை மையம் தொடங்கப்பட்டது. 2022-2023, கல்வியாண்டில், 12-ம் வகுப்பு வாரியத் தேர்வுகளில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மன நல ஆலோசனை சேவைகள் வழங்கும் செயல்முறையை தமிழ்நாடு அரசு செயல்படுத்தியது. இதனடிப்படையில் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களாக அறிவிக்கப்பட்ட மொத்தம் 46,932 மாணவர்களுக்கு மன நல ஆலோசனை வழங்கப்பட்டது.
கடந்த ஆண்டில் 146 மாணவர்கள் (82 ஆண்கள் மற்றும் 64 பெண்கள்) அதிக மன அழுத்தம் உள்ளவர்களாக அடையாளம் காணப்பட்டனர். இதையடுத்து அவர்களின் மன நலம் கருதி தொடர் அழைப்புகள் மூலம் ஆலோசனை வழங்கப்பட்டது.
அந்த மாணவர்கள் மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதற்காக மாவட்ட மனநல உளவியலாளர்களிடம் முன்னுரிமை அடிப்படையில் பரிந்துரைக்கப்பட்டு அவர்கள் மூலமும் மனநல ஆலோசனை வழங்கப்பட்டது.
இதேபோல் கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதிய குறைந்த மதிப்பெண் பெற்ற 65,823 மாணவர்களுக்கு தேவையான மன நல ஆலோசனை வழங்கப்பட்டது.
அதேபோல் இந்த ஆண்டில் 7,60,606 மாணவர்கள் 12-ம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளனர். அவர்களில் தேர்ச்சி பெறாத 51,919 மாணவர்கள் (32164 ஆண்கள் மற்றும் 19755 பெண்கள்) என பெறப்பட்ட பட்டியலிட்ட மாணவர்களுக்கு மன நல ஆலோசனை வழங்கப்படவுள்ளது.
இச்சேவையானது சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை '104' - தொலைபேசி மருத்துவ உதவி தகவல் மையம் மற்றும் '14416' - நட்புடன் உங்களோடு மனநல சேவை மையம், சுகாதாரத் துறை மூலம் 30 இருக்கைகள் கொண்ட 100 மன நல ஆலோசகர்களைக் கொண்டு ஆலோசனை வழங்கப்படும். 30 மன நல ஆலோசகர்கள் 3 சுழற்சிமுறையில் செயல் படுவர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications












