தரமான கல்விக்கு ஆசிரியர்கள் மாணவர்கள் குறித்து கலந்துரையாடல்

Posted By:

ஆசிரியரக்ளுக்கு கல்விப் பயிற்சிகள் அவசியம் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார் . தமிழகத்தில் 423 அதிகாரிகள் மற்றும் 43 மாவட்ட கல்வி அலுவலர்கள் என மொத்தம் 498 அலுவலர்களுக்கு தலைமைபண்பு கல்வித்திட்டமிடல் குறித்து சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் புதன்கிழமை முதல் இரண்டு நாள் பயிற்சி தொடங்கியது .

கல்வித்துறையை மேம்படுத்த  கல்வியாளர்கள் கலந்தாய்வு  !

பள்ளிகளில் ஆய்வகங்களின் தரத்தை அதிகப்படுத்த வேண்டும் . முதண்மை கல்விதொடக்க அதிகாரிகள் ஆகிய அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையின் இறுதியாக வெளியிடப்பட்ட தகவலின் படி ஆசிரியர்களுக்கு சிறப்பான தகுதிகள் கொண்டிருக்க  வேண்டும் . அறிவியல் ஆய்வகங்களில் திறமையான பட்டதாரிகள் நியமிக்கப்படும் போது மாணவர்கள் திறனும் அதிகரிக்கும் .

ஆசிரியர்களுக்கு இருக்கும் இடர்பாடுகளை குறைக்கும் போது மாணவர்களுக்கு அவர்கள் மிகச்சிறந்த வழிகாட்டியாக இருப்பார்கள் . பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே கற்றல் ,கற்பித்தலின் போக்கு சிறப்பாக இருக்கும் . ஆசிரியர்ளின் மனநிலையை சிறப்பாக்க இதுவரை பின்லாந்து நாட்டில் மட்டும்தான் யோசிக்கப்பட்டது . உலகிலேயே சிறந்த பாடத்திட்டம் கொண்ட நாடு பின்லாந்து நாடுதான் .

ஆசிரியர்களின் சிறப்பான பங்கெடுப்பு வருங்கால சந்ததிகளின் ஒழிமயமான வாழ்வுக்கு வழிகாட்டும் . தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சிக்காக சிறப்பான நிதி வசதிகள் உருவாக்கப்படும் என கூறப்பட்டுள்ளது . புதியப்பாடத்திட்டத்தினை எவ்வளவு சிறப்பாக தரமானதாக உருவாக்குகிறோமோ அந்தளவிற்கு ஆசிரியர்களையும்  தரமான கற்பிப்பாளர்களாக  உருவாக்க வேண்டும் . பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் இதனை மனதில்கொண்டு சிந்தித்து செயலாற்றுவது சிறப்பான ஒரு நேர்மறையாக்கம் என்ற நம்பிக்கை அளிக்கிறது . 

சார்ந்த பதிவுகள்:

புதியப்பாடத்திட்டத்தில் கணினி பாடம் 3 ஆம் வகுப்பு முதல் 10 வரை 

English summary
here article tell about teachers training is most important to develop standard of students

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia