தமிழகத்தில் 5 "ஆயுஷ்' மருத்துவ கல்லூரிகள் கேட்டு முன்மொழிவு: மத்திய அரசு தகவல்

Posted By:

சென்னை: தமிழகத்தில் ஐந்து ஆயுஷ் (ஆயுர்வேதம், யுனானி சித்தா, ஹோமியோபதி) மருத்துவக் கல்லூரிகள் தொடங்க அனுமதி கேட்டு மத்திய அரசுக்கு முன்மொழிவுகள் வந்துள்ளன. ஆனால் இதுதொடர்பாக எந்த முடிவையும் மத்திய அரசு எடுக்கவில்லை. என்று மக்களவையில் "ஆயுஷ்' துறை இணை அமைச்சர் (தனி) ஸ்ரீபாத நாயக் தெரிவித்தார்.

இதுதொடர்பாக, நீலகிரி மக்களவை அதிமுக உறுப்பினர் சி.கோபாலகிருஷ்ணன் எழுப்பியிருந்த கேள்விக்கு அவர் மக்களவையில் நேற்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்:

தமிழகத்தில் 5

நாட்டில் மணிப்பூர், மேகாலயா, மிúஸôரம், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா உள்ளிட்ட 6 மாநிலங்களிலும், அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள், தாதர் மற்றும் நாகர் ஹாவேலி, டாமன் மற்றும் டையு, லட்சத்தீவுகள் ஆகிய நான்கு யூனியன் பிரதேசங்களிலும் ஆயுஷ் கல்லூரிகள் இதுவரை அமைக்கப்படவில்லை. அங்கு கல்லூரிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் 5 ஆயுர்வேத கல்லூரிகள், 5 இயற்கை மருத்துவக் கல்லூரிகள், 1 யுனானி மருத்துவக் கல்லூரி, 8 சித்த மருத்துவக் கல்லூரிகள், 10 ஹோமியோபதி மருத்துவக் கல்லூரிகள் என மொத்தம் 29 "ஆயுஷ்' மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.

தமிழகத்தில் புதிதாக தலா இரண்டு ஆயுர்வேதம், சித்த மருத்துவம், ஒரு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரிகள் தொடங்கவும் தனியார், அரசு மூலம் நிகழாண்டில் ஆயுஷ் அமைச்சகத்திற்கு முன்மொழிவுகள் வந்துள்ளன. ஆனால் இதுதொடர்பாக மத்திய அரசு இன்னும் முடிவெடுக்கவில்லை என்றார் அமைச்சர்.

English summary
The government is considering setting up a structured central regulatory regime for AYUSH drugs, Lok Sabha was informed today."Government has considered setting up of a structured central regulatory regime for AYUSH drugs," AYUSH Minister Shripad Naik said in a written reply in Parliament. The central government grants permission for the setting up of new Ayurveda, Siddha, Unani (ASU) and Homoeopathy Medical Colleges under the provisions of Section 13A of the Indian Medicine Central Council Act, 1970, and Section 12A of the Homoeopathy Central Council Act, 1973, respectively."There is no Central Act and Regulatory Central Council for Yoga and Naturopathy," he said. Naik added that a total of 92 proposals have been received during 2015 from various institutions.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia