இன்ஜினீயரிங், கம்ப்யூட்டர் சம்பந்தமான தொழில் படிப்புகளில் சேரும் போது ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த தமிழ் வழியில் படித்த மாணவர்கள் அதிக அளவில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இது பல்வேறு ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.
குறிப்பாக அவர்கள் ஆங்கிலத்தில் பேசுவதற்கும், எழுதுவதற்கும் ஆங்கில வழியில் உள்ள பாடங்களைப் படித்து புரிந்துகொள்வதற்கு அதிக சிரமங்களை எதிர்கொள்கின்றனர். அதைப் போலவே தொழில்முறை படிப்புகளில் அதிகமாக வரும் கணிதப் பாடங்களிலும் அவர்கள் அதிக சிரமத்தை எதிர்கொள்வதாக ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஊரகப் பகுதி மாணவர்களின் ஆங்கில மொழித்திறன் எப்போதும் குறைவாக காணப்படுகிறது. இதன் காரணமாக, அரசுப் பள்ளிகளில் படிக்கும் 12 மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வில் தேர்ச்சி அடைந்தாலே போதும் என்ற நிலைக்கு ஆசிரியர்கள் தள்ளப்படுகின்றனர்.
ஆங்கிலம், கணிதத்தில் அவர்கள் சுமாரான நிலையில் இருப்பதால் தொழில்முறைக் கல்வியில் அவர்கள் தேர்ச்சி பெறுவது குறைகிறது. இதனால் அவர்கள் பொறியியல் போன்ற படிப்புகளைப் பயின்று அனைத்து தேர்வுகளிலும் வெற்றி பெற்று வெளியே வருவது கடினமாக சூழ்நிலையாக உள்ளது.

இந்த திடுக்கிடும் புள்ளிவிவரங்கள், மாநிலத்தின் கிராமப்புற குழந்தைகள் ஆங்கிலம் மற்றும் கணிதத்தில் இன்னும் பின்தங்கியிருப்பதைக் காட்டுகின்றன.
இந்நிலையில்தான், ஆங்கில அறிவு அதிகரிக்கும் நோக்கத்தோடு கிராமப்புறங்களில் வசிப்பவர்களும் தங்களது குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்ந்து வருகின்றனர்.
அதேநேரத்தில் ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் ஆங்கிலக் கல்வி முறை கொண்டு வரப்பட்டுள்ளது.
தாய்மொழியான தமிழ்மொழியில் கற்பது நல்லதா? ஆங்கிலத்தில் கற்பது நல்லதா? என பட்டிமன்றமே நடத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசு தமிழ் மொழிக்கு எதிராக ஆங்கில வழி கல்விமுறையை கொண்டு வந்துள்ளதாக நினைக்க வேண்டாம்.. கால மாற்றத்துக்கு ஏற்ப, இம்முடிவை எடுக்க வேண்டிய சூழல் காணப்படுகிறது. வெளி மாநிலங்களில் வேலைக்கு செல்பவர்களுக்கு ஆங்கில மொழி தெரிந்திருப்பது அத்தியாவசியமாகும். தாய்மொழியான தமிழ் தெரிந்திருப்பதுடன் மற்ற மொழியான ஆங்கிலமும் தெரிந்திருப்பது நல்லதுதான் என்கின்றனர் கல்வி ஆர்வலர்கள்.
ஊரகப் பகுதி பள்ளிகளிலும் தாய்மொழிக் கல்வியுடன் ஆங்கிலத்தையும் சேர்த்து கற்பதால் எதிர்காலத்தில் அதாவது 12-ம் வகுப்புக்குப் பிறகு அவர்கள் தொழில்முறைக் கல்வியைப் பயிலும் அவர்களுக்கு அதிக சிரமம் இருக்காது என்கின்றனர் கல்வியாளர்கள்.
குறிப்பாக கல்லூரிகளில் ஆசிரியர்கள் ஆங்கிலவழியில் பாடம் நடத்தும்போது அதை புரிந்துகொள்வதில் தமிழ் வழியில் படித்த ஊரகப் பகுதி மாணவர்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து அருகில் உள்ள மாணவர்களைச் சார்ந்தே அவர்கள் இருக்கவேண்டியது. மேலும் தேர்வின்போது அவர்கள் பாடங்களை மனப்பாடம் செய்து எழுத வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இல்லாவிட்டால் இன்ஜினீயரிங் பாடங்களுக்காக தனியாக டியூஷன் செல்ல வேண்டிய நிலையும் ஊரகப் பகுதி மாணவர்களுக்கு ஏற்படுகிறது.
படித்து முடித்து வேலை என்று வரும்போதும் ஊரகப் பகுதி மாணவர்களுக்கு அதிக சிக்கல்கள் ஏற்படுகின்றன.
ஆங்கில வழியில் இன்ஜினீயரிங் படிக்கும் மாணவர்கள் வளாகத் தேர்வுகளில் (கேம்பஸ் இன்டர்வியூ) எளிதாக வெற்றி பெற்று தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளை பெற்று விடுகிறார்கள். ஆனால் தமிழ் வழியில் என்ஜினீயரிங் படிக்கும் மாணவர்கள் இந்த வாய்ப்புகளை பெறுவதில் சவால்களை சந்திக்க வேண்டியது இருக்கிறது.
நேர்முகத் தேர்வுகளை எதிர்கொள்வதற்கு பயம் ஏற்படுகிறது. அவர்கள் ஆங்கிலத்தில் கேள்வி கேட்க அதற்கு தகுந்த பதிலை ஆங்கிலத்தில் சொல்வதற்கு அவர்கள் சிரமப்படுகின்றனர்.
பொறியியல் பட்டதாரிகளுக்கு, பன்னாட்டு நிறுவனங்கள்தான் (எம்என்சி கம்பெனிகள்) பெரும்பாலும் வேலைவாய்ப்புகளை வழங்கி வருகின்றன. அவர்களின் அலுவல் மொழி ஆங்கிலம்தான். தமிழ் வழியில் படித்தால் அவர்கள் வேலைக்கு எடுத்துக்கொள்வார்களா என்கிற பயம் மாணவர்களுக்கு இருக்கிறது.
இந்த நிலை மாறுவதற்கு, 1-ம் வகுப்பு முதலே தாய்மொழிக் கல்வியுடன் ஆங்கிலத்தையும் நன்கு படித்து மாணவர்கள் முன்னேறுவதே முக்கியம் என்கிறார்கள் கல்வி நிபுணர்கள்.
பொறியியல் படிப்பு படிக்கும்போது, முழு ஈடுபாட்டுடன் படித்து, திறனை வளர்த்துக் கொள்வது அவசியம். அதன் மூலமாகத்தான் எளிதில் வேலை பெற முடியும். பொறியியல் படித்தவர்கள் தொழில் முனைவோராக மாறுவது இங்கே மிகவும் குறைந்த அளவிலேயே இருக்கிறது. தற்போது, ஆர்டிபிசியல் இன்ஜினீயரிங், டேட்டா சயின்ஸ் மிகவும் பிரபலமாக உள்ளது. டேட்டா அனலடிக்ஸ் துறையில் மட்டும் இந்திய அளவில் 1லட்சம் பேரை வேலைக்கு எடுக்க பன்னாட்டு நிறுவனங்கள் ஆர்வமாக உள்ளன.
ஆர்டிபிசியல் இன்ஜினியரிங் துறையில் பல வாய்ப்புகள் காத்துகிடக்கின்றன. ரோபாடிக், பயோ மெடிக்கல் துறைகள் கவனம் பெற்று வருகின்றன. இவையெல்லாம் வேலைவாய்ப்புகளுக்கான துறைகள். மாணவர்கள் இந்த துறைகளை தேர்ந்தெடுத்து பயன்பெற வேண்டும்.
இதுபோன்ற படிப்புகளைப் பயில்வதற்கு சரளமான ஆங்கில அறிவு தேவை என்பதை மாணவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.


Click it and Unblock the Notifications












