'இந்த க்ரூப் வேணாம்...' - 100 சதவீத ரிசல்டுக்காக மாணவர்களைத் தவறாக வழிநடத்தும் பள்ளிகள்!

Posted By:

இன்றைக்குப் பள்ளிகளின் ஒரே நோக்கம் 'எப்படியாவது 100 சதவீத ரிசல்ட் காட்ட வேண்டும்... அதுவும் அதிக மதிப்பெண்களுடன்' என்பதுதான்.

அரசின் பள்ளிக் கல்வித் துறையும்கூட இதையே இலக்காக நிர்ணயித்துள்ளது அரசுப் பள்ளிகளுக்கு.

குறிப்பாக ப்ளஸ் டூ மாணவர்களுக்குத்தான் இந்த நெருக்கடி அதிகம்.

தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள பல பள்ளிகளில் பத்தாம் வகுப்பு தேர்ச்சியடைந்து, பதினோறாம் வகுப்பில் சேரும் மாணவ மாணவிகளை, அதிக மதிப்பெண்கள் பெற எளிமையான கோர்ஸ்களில் சேருமாறு வழிகாட்டுகின்றனர் பள்ளி நிர்வாகிகள்.

பல பள்ளிகள் பெரும்பாலும் காமர்ஸ், தொழில்கல்விப் பிரிவுகளில் சேருமாறு மாணவர்களை கட்டாயப்படுத்துகின்றனர். இவற்றில் 600 மதிப்பெண்களை எளிதாகப் பெற முடியும் என்றும் கூறுகிறார்களாம்.

கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களில் சேர விரும்பும் மாணவர்களிடம், 'இது கஷ்டமான பிரிவு.. அதிக மதிப்பெண் பெற முடியாது.. எனவே வொகேஷனல் அல்லது காமர்ஸ் படியுங்கள்' என்று அறிவுறுத்துகிறார்களாம்.

மாணவர்களின் பெற்றோர்களுக்கும் இவ்வாறே பள்ளி நிர்வாகங்கள் கூறுவதால், வேறு வழியின்றி அவர்கள் சொல்லும் பிரிவுகளிலேயே மாணவர்களைச் சேர்க்க வேண்டிய நிர்ப்பந்துக்கு ஆளாகிறார்கள்.

பல தனியார் பள்ளிகளில் ப்ளஸ் டூவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் வணிகவியல் பிரிவைச் சேர்ந்த மாணவர்களாகவே இருப்பதைப் பார்க்கலாம்.

கணிதவியல் மற்றும் வணிகவியல் படிக்கும் மாணவ மாணவியர்களின் எதிர்காலம் குறித்த கவலை ஏதுமின்றி, தங்கள் பள்ளியின் மதிப்பெண் சாதனைகளுக்காக அவர்களை இப்படி தவறான வழிநடத்தும் தனியார் பள்ளிகளை என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கிறார்கள் பெற்றோர்கள்.

English summary
Most of the private schools have misguided the 10th students to join in commerce of vocational groups.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia