கவர்னர் முன்னிலையில் தமிழக அரசுக்கு நிபந்தனை விதித்த கல்வி 'யாவாரிகள்'!

Posted By:

சென்னை: கட்டாய கல்வி உரிமை சட்ட அறிவிப்பு படி 25 சதவீத ஒதுக்கீட்டில் சேர்க்கப்பட்ட குழந்தைகளுக்கான செலவினம் ரூ.150 கோடியை தமிழக அரசு கொடுத்தால்தான் இந்த ஆண்டு மாணவர்களை சேர்ப்போம் என்று தனியார் பள்ளிகள் சங்கங்கள் அறிவித்துள்ளன.

தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக்குலேஷன், மேனிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் வெள்ளி விழா மாநாடு சென்னை காமராஜர் அரங்கில் நேற்று நடந்தது. இதற்கு மாநில தலைவர் கனகராஜ் தலைமை தாங்கினார்.

கவர்னர் முன்னிலையில் தமிழக அரசுக்கு நிபந்தனை விதித்த கல்வி 'யாவாரிகள்'!

கவனர் ரோசய்யா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாநாட்டு மலரை வெளியிட்டார். மாநாட்டில் பொதுச் செயலாளர் நந்தகுமார் தீர்மானங்ளை விளக்கி பேசும்போது, தனியார் பள்ளிகளுக்கு எந்த காரணமும் இல்லாமல் அங்கீகாரங்கள் நிறத்தி வைக்கப்பட்டுள்ளன. அவற்றை உடனடியாக நிபந்தனையில்லாமல் வழங்க வேண்டும். ஓராண்டு, இராண்டு அங்கீகாரங்களை நிறுத்த வேண்டும்.

சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு வழங்குவது போல ஆன்லைன் மூலம் அங்கீகாரம் மாநில அரசும் வழங்க வேண்டும். 5 ஆண்டுக்கு ஒரு முறை அங்கீகாரம் என்ற முறையைக் கொண்டு வர வேண்டும். 8ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி என்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.

மேலும், கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் கூறிய படி தனியார் பள்ளிகள் ஒவ்வொரு ஆண்டும் 25 சதவீத ஏழை எளிய மாணவர்களை சேர்க்க வேண்டும் என்று மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2011ம் ஆண்டு முதல் மேற்கண்ட விதிப்படி சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கான கல்விச் செலவினங்களை மாநில அரசு இதுவரை வழங்கவில்லை. கடந்த 3 ஆண்டுக்கான பாக்கித் தெகை மட்டும் ரூ.150 கோடி உள்ளது. இதை உடனே மாநில அரசு வழங்க வேண்டும்.

இல்லை என்றால் இந்த ஆண்டில் மேற்கண்ட 25 சதவீத அடிப்படையில் மாணவர்களை சேர்க்க முன்வரமாட்டோம்," என்று நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

English summary
The private school owners urged the govt of Tamil Nadu to pay the expenses for the students those admitted in compulsory education rights scheme.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia