அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவராக ஆசையா...?

Posted By:

சென்னை: அஞ்சல் ஆயுள் காப்பீடு, ஊரக ஆயுள் காப்பீடு விற்பனைக்கான நேரடி முகவர் பணிக்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அஞ்சல் துறை அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வயது வரம்பு- 18 வயதிலிருந்து 60 வயது வரை உள்ளவர்கள் இந்த ஆயுள் காப்பீடு விற்பனை நேரடி முகவர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவராக ஆசையா...?

கல்வித் தகுதி - 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன,

விண்ணப்பப் படிவம் கிடைக்கும் இடம் - சென்னை அண்ணா சாலையில் உள்ள தலைமை அஞ்சலகத்தில் விண்ணப்பப்படிவத்தினைப் பெற்றுக் கொள்ளலாம்.

கடைசி தேதி - பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களை மார்ச் 15ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். அதற்கு மேல் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

மேலும் தேவையான அனைத்து விபரங்களும் விண்ணப்பம் வாங்கும் இடத்தில் உங்களுக்கு அறிவிக்கப்படும். அத்துடன் விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய தகவல்களும் உங்களுக்குக் கொடுக்கப்படும்.

ஆயுள் காப்பீடு விற்பனைக்கான நேரடி முகவர் பணிக்கான நேர் காணல் சென்னை அண்ணாசாலையிலுள்ள அஞ்சலகத்தில் வைத்து நடைபெறும். நேர்க்காணலுக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும்.

நேர்காணலுக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு செல்லும் போது சுயவிபரக் குறிப்புகள் மற்றும் கல்விச் சான்றிதழ்கள் ஆகியவற்றை கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டும்.

English summary
Eng summary : postal department has announced that postal life insurance agent & rural life insurance agent offer for direct sale.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia