முதுகலை பட்டதாரி ஆசிரியர் எழுத்து தேர்வு ஜூலை 2 ... தேர்வு மைய தகவல்கள்

Posted By:

சென்னை : முதுகலை பட்டதாரி ஆசிரியர் எழுத்து தேர்வு ஜூலை 2ந் தேதி நடைபெறுகிறது. தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு எதை எடுத்துச் செல்லவேண்டும் என்பதைப் பற்றிய தகவல் இதோ உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது.

ஜூலை 2ந் தேதி நடைபெறும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் எழுத்துத் தேர்வுக்கு 2 லட்சத்து 18 ஆயிரத்து 491 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்தத் தேர்வு 32 மாவட்டங்களில் உள்ள 601 மையங்களில் நடைபெற இருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

 முதுகலை பட்டதாரி ஆசிரியர் எழுத்து தேர்வு ஜூலை 2 ... தேர்வு மைய தகவல்கள்

1. தேர்வர்கள் தங்களது தேர்வு மையத்துக்கு காலை 8.30 மணிக்குள் செல்ல வேண்டும்.

2. தேர்வர்கள் கருப்பு அல்லது நீலநிற பந்து முனை பேனா, தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு மற்றும் ஆளறிச்சான்றிதழ் (ஐடெண்டிகார்டு) மட்டுமே கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

3. செல்போன், கால்குலேட்டர் போன்ற வேறு எந்த பொருட்களும் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள்.

4. தேர்வுக்கூட நுழைவுச்சீட்டில் புகைப்படம் இல்லாதவர்கள் ஒரு பாஸ்போர்ட் மற்றும் ஸ்டாம்ப் அளவு புகைப்படம் எடுத்து செல்ல வேண்டும்.

5. மேலும் பிற சேர்க்கைப்படிவம் 8ல் உள்ள படிவத்தினை www.trb.tn.nic.in என்ற இணயதள முகவரியில் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து சான்றொப்பம் பெற்று எடுத்துச் செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.

English summary
Above article mentioned that post graduate teacher exam will be held on july 2

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia