பி.இ. படிப்பில் இடம் கிடைத்தும் சேர முடியாத நிலையில் ஏழை மாணவி!

Posted By:

சென்னை: பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்று, பி.இ. படிப்பில் சீட் கிடைத்தும் சேர முடியாத நிலையில் தவிக்கிறார் சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த மாணவி பி. உமாசங்கீதா.

சேலம் மாவட்டம், சங்ககிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், கடந்த ஏப்ரலில் நடந்த பிளஸ் 2 தேர்வில் பள்ளியளவில் முதலிடம் பெற்றவர் மாணவி பி.உமாசங்கீதா,

பி.இ. படிப்பில் இடம் கிடைத்தும் சேர முடியாத நிலையில் ஏழை மாணவி!

இவர் சங்ககிரி வட்டம், தேவண்ண கவுண்டனூர் கிராமம், புதூர் மேற்கு வளவு பகுதியைச் சேர்ந்தவர். இவரது பெற்றோர் பெருமாள்- சந்திரா. கூலித் தொழிலாளிகளான இவர்கள் தங்களது மகளை கஷ்டப்பட்டு பிளஸ்2 வரை படிக்க வைத்துள்ளனர்.

பிளஸ் 2 தேர்வில் 1069 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பெற்றார்.

மேற்படிப்பு தொடர வசதி இல்லாத நிலையில் இருந்த இவருக்கு, பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்கவும், கலந்தாய்வில் கலந்து கொள்வதற்கும் நண்பர்கள் உதவினர். சென்னையில் நடைபெற்ற கலந்தாய்வில் உமாசங்கீதா கலந்துகொண்டார். கவுன்சிலிங்கில் இவருக்கு தஞ்சாவூர் அரசு பொறியியல் கல்லூரியில் இவருக்கு சேர்க்கை இடம் கிடைத்துள்ளது.

ஆனால் ஹாஸ்டலில் தங்கிப் படிக்கவும், புத்தகங்கள் வாங்கவும் இவருக்கு நிதி வசதியில்லை.

இவரது முகவரி: 4624, புதூர் மேற்கு வளவு, தேவண்ண கவுண்டனூர் அஞ்சல், சங்ககிரி வட்டம், சேலம் மாவட்டம் - 637 301, செல்லிடப்பேசி எண்: 97152 81726.

ஏழை மாணவர்களுக்கு உதவும் அறக்கட்டளைகள், நல்ல எண்ணம் படைத்த உள்ளங்கள் தனக்கு உதவினால் பி.இ. படிப்பை முடித்துவிடுவேன் எனத் தவிக்கிறார் உமாசங்கீதா.

English summary
A Poor student Umasangeetha from Salem District is in need financial help to study BE course. She has got free BE seat in Tanjore Engineering College.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia