பாண்டிச்சேரி அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விண்ணப்பிக்க மே 15 கடைசி..!

புதுச்சேரி மாநில அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் உள்ள 2,326 இடங்களுக்கு வரும் மே 15 -ஆம் தேதிக்குள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அம்மாநில கல்வித் துறை செயலர் அ.அன்பரசு தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மாநில அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் உள்ள 2,326 இடங்களுக்கு வரும் மே 15 -ஆம் தேதிக்குள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அம்மாநில கல்வித் துறை செயலர் அ.அன்பரசு தெரிவித்துள்ளார்.

பாண்டிச்சேரி அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விண்ணப்பிக்க மே 15 கடைசி..!

புதுச்சேரி மாநிலத்தில் லாசுப்பேட்டை மோதிலால் நேரு அரசு பாலிடெக்னிக் கல்லூரி, லாசுப்பேட்டை அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி, வரிச்சிக்குடி காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரி, காரைக்கால் மேடு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி, ஏனாம் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பாலிடெக்னிக் கல்லூரி, மாஹே இந்திரா காந்தி பாலிடெக்னிக் கல்லூரி என 6 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.

இந்தக் கல்லூரிகளில் உள்ள இடங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் உள்ளடக்கிய 2019 - 20 ஆம் கல்வி ஆண்டுக்கான விரிவான மாணவர் சேர்க்கை தகவல் கையேடு வெளியிடும் நிகழ்ச்சி புதுவை தலைமைச் செயலக வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மாநில கல்வித் துறை செயலரும், சென்டாக் தலைவருமான அ.அன்பரசு செய்தியாளர்களிடம் பேசியதாவது:-

தற்போது புதுவை மாநிலத்தில் உள்ள 6 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் உள்ள 2,326 இடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில், வழக்கமான இடங்கள் 1,372, பிளஸ் 2, ஐடிஐ முடித்துவிட்டு சேரும் மாணவர்களுக்கான லேட்டரல் நுழைவுக்கான இடங்கள் 809, மாற்றுத் திறனாளிகளுக்கான இடங்கள் 25, பகுதி நேர படிப்புக்கான இடங்கள் 120 உள்ளன.

இந்த இடங்களுக்கு மாணவர்கள் மே 15 -ஆம் தேதி வரை இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். கடந்தாண்டைப் போலவே நிகழாண்டும் இணையதளம் மூலம் கலந்தாய்வு நடத்தப்படும். இணையதளம் மூலம் விண்ணப்பிக்க தனியார் மையங்களில் அதிக கட்டணம், காலதாமத்தைக் குறைக்க அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உதவி மையங்களை ஏற்படுத்தி, விண்ணப்பிக்க ஏற்பாடு செய்து வருகிறோம். இதை பொதுசேவை மையங்களுக்கும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம்.

நிகழாண்டு சென்டாக்கில் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கும் போது, மாணவர்கள் தங்களது தேர்வெண்ணைப் பதிவிட்டால் போதும், அவர்களது மதிப்பெண், எந்தப் பள்ளி உள்ளிட்ட விவரங்களைத் தானாக எடுத்துக் கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளோம். இதன் மூலம் மதிப்பெண் சான்றிதழைச் சரிபார்க்கும் நேரம் குறையும். இதற்காக தமிழ்நாடு, ஆந்திரம், கேரள மாநிலங்களின் கல்வித் துறையுடன் இணைந்து, மாணவர்களின் தகவல்களை இணையத்தில் பதிவேற்றியுள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
pondicherry government arts college admission Started- May 15 last date
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+