சீன எல்லையில் மோடி கூறிய திருக்குறள்! விளக்கம் என்னன்னு தெரியுமா?

இந்தியா-சீனா இடையேயான எல்லைப் பிரச்சனையைத் தொடர்ந்து, நேற்று பிரதமர் மோடி லடாக்கில் ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் தமிழர்களின் பெருமைக்குரிய திருக்குறளை எழுச்சியுரையாக கூறினார்.

 
சீன எல்லையில் மோடி கூறிய திருக்குறள்! விளக்கம் என்னன்னு தெரியுமா?

இந்தியா- சீனா இடையே எல்லைப் பிரச்சனை இருந்துவரும் நிலையில் சமீபத்தில் லடாக் எல்லையில் இராணுவ வீரர்கள் பலர் கொள்ளப்பட்டனர். அதற்கு, இந்திய இரா1வ வீரர்களும் பதிலடி தரும் வகையில் சீன இராணுவ வீரர்களைக் கொன்று குவித்தனர்.

இதனிடையே, சீனா மீது பொருளாதார முடக்கத்தை ஏற்படுத்தும் வகையில், இந்தியாவில் பயன்பாட்டிலிருந்து வந்த 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது.

இந்நிலையில், லடாக்கின் நிம்மு பகுதியில், ராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி ஜூலை 3ம் தேதியன்று உரையாற்றினார். அப்போது, தனது உரையின் இறுதியில், படைமாட்சி அதிகாரத்தில் இடம் பெற்றுள்ள, திருக்குறள் ஒன்றை அவர் குறிப்பிட்டு உரையாற்றினார்.

"மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
எனநான்கே ஏமம் படைக்கு"

என்ற திருக்குறளை அவர் குறிப்பிட்டுப் பேசினார். தொடர்ந்து, அந்த திருக்குறளுக்கு இந்தியில் விளக்கமும் அளித்தார். தமிழகத்தில் ஆரம்பக் கல்வி முதலே போதிக்கப்பட்டு வரும் உலகப் பொதுமறையான திருக்குறளைக் குறிப்பிட்டு மோடி பேசிய நிகழ்வு தற்போது ட்ரென்டாகி வருகிறது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
PM Narendra Modi in Ladakh: He refers Thirukkural at his speech
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X