சாஸ்த்ரா பல்கலை.யால் தத்தெடுக்கப்பட்ட மாணவர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்!

Posted By:

சென்னை: தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தால் தத்தெடுக்கப்பட்டு ரிஷிகேஷில் பயின்று வரும் மாணவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார்.

உத்தரகண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள சுவாமி தயானந்தா ஆசிரமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பிரதமர் மோடி அண்மையில் வந்தார். அவர் சுவாமி தயானந்தா பள்ளி மாணவர்களுடன் அவர் கலந்துரையாடி அவர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

சாஸ்த்ரா பல்கலை.யால் தத்தெடுக்கப்பட்ட மாணவர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்!

2013-ல் உத்தரகண்டில் பயங்கர வெள்ளப் பெருக்கு ஏற்பட்டபோது இங்குள்ள மக்களுக்கு பல்வேறு உதவிகளை தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் செய்தது. மேலும் அங்கு பெற்றோரின்றி தனித்து விடப்பட்ட நூறு குழந்தைகளுக்கு இலவசக் கல்வியை அளிக்க சாஸ்த்ரா பல்கலை முடிவு செய்தது.

அதன் படி பல்கலைக்கழகம் 100 குழந்தைகளை தத்தெடுத்து அவர்களுக்கு கல்வி போதித்து வருகிறது. அவர்கள் சுவாமி தயானந்தா ஆசிரமத்தில் தங்கி படித்து வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து ஆசிரமத்துக்கு வந்த மோடியுடன், சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தால் தத்தெடுக்கப்பட்ட மாணவர்கள் கலந்துரையாடினர். அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பிரதமர் பதிலளித்தார். சுமார் 40 குழந்தைகள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பல்கலைக்கழக முதன்மையர்(திட்டம் மற்றும் மேம்பாட்டுத் துறை) எஸ். வைத்திய சுப்பிரமணியம் கலந்து கொண்டார். மேலும் சுவாமி தயானந்தாவின் சீடர் சுவாமி சாந்தாமானந்தாவின் டாக்டர் பட்டத்தை வைத்திய சுப்பிரமணியம் நேரில் சென்று வழங்கினார். அவர் மேற்கொண்ட ஆய்வு, இது சிறந்த ஆய்வேடாக மதிப்பிடப்பட்டு ரூ. 25,000 ரொக்கப் பரிசும் அளிக்கப்பட்டது. சுவாமி தயானந்தா தன் சீடருக்கு ஆய்வுப் பட்டச் சான்றிதழை வழங்கினார்.

English summary
Prime Minister Narendra Modi has speak with the students in Uttarkhand Swami Dayanada ashram who are adopted by Tankore Sastra University.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia