புதிய கல்விக் கொள்கையின் உயர் கல்வி சீர்திருத்தங்கள் என்னும் மாநாடு இன்று நடைபெற்றது. அதில் பங்கேற்ற பிரதமர் மோடி, சமீபத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள புதிய கல்விக் கொள்கை முறை சர்வதேச அளவில் இந்தியாவை உயர்த்தும் என கூறியுள்ளார்.

இன்று நடைபெற்ற அந்த மாநாட்டில் பங்கேற்ற மோடி புதிய கல்வி கொள்ளை குறித்து பேசிய முழு விபரங்களை இங்கே காணலாம் வாங்க.
புதிய கல்விக் கொள்கை
புதிய கல்வி கொள்கையிலுள்ள திட்டங்கள் குறித்து கடந்த 3, 4 ஆண்டுகளாக பல்வேறு விவாதங்கள், ஆலோசனைகள் நடத்தப்பட்டுள்ளது. கல்வியாளர்களுடன் மேற்கொள்ளப்பட்ட ஆலோசனைக்கு பிறகே இதற்கு ஒப்புதல் அளித்துள்ளோம். சர்வதேச முறைகளுக்கு ஏற்றவாறு இதனை வகுத்துள்ளோம்.
இதற்கு தான் கல்வி முறையை மாற்றினோம்
நல்ல குடிமக்களை உருவாக்கும் என்றால் கல்வி முறையை மாற்றவேண்டியது கட்டாயம். மாணவர்கள் சமூகத்தில் ஒன்றி கல்வி கற்க வேண்டும். கடந்த காலத்தில் விமர்சன ரீதியான மற்றும் புத்தாக்க சிந்தனைகள் புறக்கணிக்கப்பட்டு இருந்தன. இந்தியாவின் கல்வி முறையை மாற்ற வேண்டிய கால கட்டம் இப்போது ஏற்பட்டுள்ளது.
2 ஆண்டுகளாகக் குறைப்பு
10+2 என்ற கல்வி முறைக்கு மாற்றாக தற்போது 5+3+3+4 என்ற கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மேலும், மாணவர்கள் நலனை மையமாகக் கொண்டு பட்டயப் படிப்புகள் 2 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டுள்ளன.
ஆசிரியர்களுக்கும் பயிற்சி
புதிய கல்வி கொள்கையில் ஆசிரியர்களுக்கான பயிற்சி என்பதும் மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. உலக நாடுகளுடன் போட்டியிடும் அளவிற்கு இந்தியாவின் இந்த புதிய கல்விக் கொள்கை அமையும். மாணவர்கள் படிப்பை இனி பாதியில் நிறுத்த வேண்டியதில்லை.
மாணவர்கள் எப்படி இருக்க வேண்டும்?
முன்பு சூழல் காரணமாகப் படிப்பைப் பாதியில் நிறுத்தியவர்கள் இந்த புதிய கல்விக் கொள்கையின் மூலம் படிப்பைத் தொடர முடியும். மாணவர்களை மேன்மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் கல்வி இருக்க வேண்டும். தொழில்முறைக் கல்வி, பயிற்சி என பல்வேறு வகையில் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. கல்வியையும் ஆராய்ச்சியையும் இணைக்கிற பங்களிப்பை புதிய கல்வி கொள்கை வழங்கும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


Click it and Unblock the Notifications












