மாணவர்களே...தயாராகுங்க... 10, 12-ம் வகுப்புத் தேர்வு தேதிகள் முழு விவரம்!

Posted By:

சென்னை: பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முழு விவரங்களை அரசுத் தேர்வுகள் இயக்குநர் அலுவலகம் நேற்று வெளியிட்டது.

அதன்படி பிளஸ்-2 பொதுத் தேர்வு மார்ச் 4-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 1-ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. அனைத்துத் தேர்வுகளும் காலை 10 மணிக்கு ஆரம்பித்து பிற்பகல் 1.15 மணிக்கு முடிவடைகின்றன.

மாணவர்களே...தயாராகுங்க... 10, 12-ம் வகுப்புத் தேர்வு தேதிகள் முழு விவரம்!

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 15-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 13-ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இந்தத் தேர்வுகள் காலை 9.15 மணிக்கு ஆரம்பித்து நண்பகல் 12 மணிக்கு நிறைவடையும் என இயக்குநர் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் தேர்வு எழுதத் தொடங்குவதற்கு முன்பாக வழக்கம்போல் கேள்வித் தாளை படிக்க 10 நிமிடங்களும், விவரங்களைச் சரிபார்க்க 5 நிமிடமும் கால அவகாசம் அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு கால அட்டவணை

பிளஸ்-2:-

4-3-2016 மொழிப் பாடம்-1

7-3-2016 மொழிப் பாடம்-2

9-3-2016 ஆங்கிலம் தாள்-1

10-3-2016 ஆங்கிலம் தாள்-2

14-3-2016 வேதியியல், கணக்குப் பதிவியல்

17-3-2016 வணிகவியல், மனை அறிவியல், புவியியல்

18-3-2016 கணிதம், விலங்கியல், நுண் உயிரியல், ஊட்டச்சத்து-உணவுக் கட்டுப்பாடு

21-3-2016 தொடர்பியல் ஆங்கிலம், இந்திய கலாசாரம், கணினி அறிவியல், உயிரி வேதியியல், அட்வான்ஸ்டு தமிழ்

23-3-2016 அரசியல் அறிவியல், செவிலியப் படிப்பு (பொதுப் பிரிவு),

புள்ளியியல், தொழில் படிப்பு எழுத்துத் தேர்வு

28-3-2016 உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம்

1-4-2016 இயற்பியல், பொருளாதாரம்

பத்தாம் வகுப்பு:

15-3-2016 தமிழ் தாள்-1

16-3-2016 தமிழ் தாள்-2

22-3-2016 ஆங்கிலம் தாள்-1

29-3-2016 ஆங்கிலம் தாள்-2

4-4-2016 கணிதம்

7-4-2016 அறிவியல்

11-4-2016 சமூக அறிவியல்

13-4-2016 விருப்ப மொழிப் பாடம்.

English summary
The School Education Department today announced the dates for the Plus Two and Tenth boards exams to be held in March. Accordingly, the Plus Two exams will be held from 4 March to 1 April and Tenth exams will be held between 15 March and 13 April.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia