பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு..!

Posted By:

சென்னை : பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தனித்தேர்வர்களும், தக்கலில் விண்ணப்பித்தவர்களும் நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

16.06.2017ந் தேதி வெள்ளிக்கிழமை அன்று www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. தனித்தேர்வர்களும், தக்கலில் விண்ணப்பித்தவர்களும் தங்கள் நுழைவுச் சீட்டினை www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரிக்குச் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு..!

விண்ணப்பதாரர்கள் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு (இந்த மாதம்) ஜூன் 23ந் தேதி முதல் ஜூலை 6ந் தேதி வரை நடைபெறும்.

எழுத்துத் தேர்வு மற்றும் செய்முறை அடங்கிய பாடங்களில் செய்முறைத் தேர்வில் 40 மதிப்பெண்களுக்கு குறைவாக பெற்று தேர்ச்சி அடையாதவர்கள் கண்டிப்பாக செய்முறை தேர்வினை மீண்டும் செய்வதோடு எழுத்து தேர்விற்கும் வர வேண்டும். அதிகபட்ச மதிப்பெண் 200 கொண்ட செய்முறை மட்டும் உள்ள பாடத்தில் தேர்ச்சி பெறாதவர்கள் மீண்டும் செய்முறை தேர்விற்கு வருகை தர வேண்டும் என அரசு தேர்வுகள் இயக்குனர் தண். வசுந்தரா தேவி தெரிவித்துள்ளார்.

சிறப்பு துணைத் தேர்வுக்கால அட்டவணை விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஜூன் 23ந் தேதி - தமிழ் முதல் தாள்

ஜூன் 24ந் தேதி - தமிழ் 2வது தாள்

ஜூன் 27ந் தேதி - ஆங்கிலம் முதல் தாள்

ஜூன் 28ந் தேதி - ஆங்கிலம் 2வது தாள்

ஜூன் 29ந் தேதி - வேதியியல், அக்கவுண்டன்சி

ஜூன் 30ந் தேதி - வணிகவியல், மனை அறிவியல், புவியியல்

ஜூலை 1ந் தேதி - கணிதம், விலங்கியல், நுண் உயிரியல், நியூட்ரிஷியன் மற்றும் டயட் டிக்ஸ்

ஜூலை 3ந் தேதி - கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், இந்திய கலாசாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், உயிரி வேதியியல், சிறப்பு தமிழ்

ஜூலை 4ந் தேதி - தொழில் கல்வி தேர்வுகள், அரசியல் அறிவியல், நர்சிங் (பொது), புள்ளியியல்

ஜூலை 5ந் தேதி - உயிரியல், வரலாறு, தாவரவியல், வர்த்தக கணிதம்

ஜூலை 6ந் தேதி - இயற்பியல், பொருளாதாரம்

English summary
Above mentioned article about 12th special sub exam hall ticket details and time table details.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia