பிளஸ்-2 மறு கூட்டல், மறு மதிப்பீடு: மாணவர்களின் பதிவெண் பட்டியல் இன்று வெளியாகிறது

Posted By:

சென்னை: பிளஸ் 2 பொதுத் தேர்வு மதிப்பெண் மறு கூட்டல், தேர்வுத் தாள் மறு மதிப்பீடுக்கு விண்ணப்பித்தவர்களில், மதிப்பெண் மாற்றம் உள்ளவர்களின் பதிவெண் பட்டியல் இன்று (ஜூன் 15) வெளியாகிறது.

scan.tndge.in என்ற இணையதளத்தில் மாலை 4 மணி முதல் மாணவர்கள் இந்தப் பட்டியலைப் பார்த்து விவரம் அறியலாம்.

பிளஸ்-2 மறு கூட்டல், மறு மதிப்பீடு: மாணவர்களின் பதிவெண் பட்டியல் இன்று வெளியாகிறது

2015 மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த மாதம் வெளியாயின. இவர்களில் மதிப்பெண் மறு கூட்டல், விடைத்தாள் நகல் கோரி ஒரு லட்சத்து 566 பேர் விண்ணப்பித்தனர்.

அவர்களில் மதிப்பெண் மறு கூட்டலுக்கு 2,835 பேரும், தேர்வுத்தாள் மறு மதிப்பீடுக்கு 3,502 பேரும் விண்ணப்பம் செய்தனர்.

இதில் மறு மதிப்பீடுக்கு விண்ணப்பித்தவர்களில் 2,782 பேரின் மதிப்பெண்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதேபோல, மறு கூட்டலுக்கு விண்ணப்பித்தவர்களில் 696 பேரின் மதிப்பெண்களில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

மதிப்பெண் மாற்றம் உள்ளவர்களின் பதிவெண் பட்டியல் இன்ற மாலை 4 மணிக்கு scan.tndge.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். மதிப்பெண் மாற்றம் இல்லாத பதிவெண்கள் பட்டியலில் இடம் பெற்றிருக்காது. எனவே மாணவர்கள் வீணாக தங்களது பதிவெண் இல்லையே என்று கவலைப்படவேண்டாம்.

மதிப்பெண் மாற்றம் உள்ள மாணவர்கள் நாை (ஜூன் 16) காலை 10 மணி முதல் www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில், தேர்வுப் பதிவெண், பிறந்த தேதி விவரங்களைப் பதிவு செய்து, திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய தாற்காலிக மதிப்பெண் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதன்மூலம் அவர்கள் எம்.பி.பி.எஸ்., பி.இ. போன்ற படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலில் முன்னேற்றம் பெற முடியும்.

English summary
Plus two Students who have applied for exam answer papers revaluation and retotaling, the list will be released today by 4 pm. Students can see the list in the site, scan.tndge.in.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia