புதிய கிரேடு முறை மதிப்பெண் அறிவிப்பு.... நீங்க எந்த கிரேடுன்னு இதைப் பார்த்து தெரிஞ்சுக்கலாம்...!

இன்று காலை 10 மணிக்கு பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டன. இதில் சிபிஎஸ்இ முறையைப் போல் கிரேடு முறை வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை : தமிழகத்தில் இன்று பிளஸ்2 முடிவுகள் வெளியிடப்பட்டது. வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்று உள்ளனர் என்பது குறிப்படத்தக்கது. தமிழகத்தில் முதன் முறையாக கிரேடு முறையைப் பயன்படுத்தி மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த வருடம் ரேங்க் பட்டியல் கிடையாது. மாநில அளவில் மதிப்பெண் பட்டியலும் கிடையாது. அதற்குப் பதில்தான் கிரேடு முறை மதிப்பெண்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

புதிய கிரேடு முறை மதிப்பெண் அறிவிப்பு.... நீங்க எந்த கிரேடுன்னு இதைப் பார்த்து தெரிஞ்சுக்கலாம்...!

மாணவ மாணவியர்கள் தாங்கள் பெற்றுள்ள மதிப்பெண்களுக்கேற்றாற் போல் கிரேடு முறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கிரேடு முறையைப் பற்றி இங்கேப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

1180க்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஏ கிரேடு வழங்கப்படுகிறது. 1171 பேர் ஏ கிரேடு பெற்றுள்ளனர்.

1151 முதல் 1180 வரை மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு பி கிரேடு வழங்கப்படுகிறது. 12,283 பேர் பி கிரேடு பெற்றுள்ளனர்.

1126 முதல் 1150 வரை மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு சி கிரேடு வழங்கப்படுகிறது. 14,806 பேர் சி கிரேடு பெற்றுள்ளனர்.

1101 முதல் 1125 வரை மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு டி கிரேடு வழங்கப்படுகிறது 17,750 பேர் டி கிரேடு பெற்றுள்ளனர்.

1001 முதல் 1100 வரை மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு இ கிரேடு வழங்கப்பட்டுள்ளது. 95,906 பேர் இ கிரேடு பெற்றுள்ளனர்.

901 முதல் 1000 வரை மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு எஃப் கிரேடு வழங்கப்பட்டுள்ளது. 1,36,849 பேர் எஃப் கிரேடு பெற்றுள்ளனர்.

801 முதல் 900 வரை மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு ஜி கிரேடு வழங்கப்பட்டுள்ளது. 1,64,489 பேர் ஜி கிரேடு பெற்றுள்ளனர்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Plus-2 exam results released at 10 am this morning. www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in Go to websites and check out the results.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X