பிளஸ்2 தேர்வு மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க இன்னும் சில மணி துளியே உள்ளன. உடனே விண்ணப்பியுங்கள்...!

Posted By:

சென்னை : பிளஸ்2 தேர்வு மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் இன்று மாலை 5.00 மணியுடன் முடிந்து விடும் என அரசு தேர்வுகள் இயக்குனர் அறிவித்துள்ளார்.

பிளஸ்2 பொதுத்தேர்வு எழுதியவர்களின் விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க 15ந் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது. தற்போது மாணவர்களின் நலன் கருதி 3 நாள் காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நீட்டிக்கப்பட்ட கால அவகாசம் மே 18 இன்று மாலை 5.00 மணியுடன் முடிவடைகிறது.

 பிளஸ்2 தேர்வு மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க இன்னும் சில மணி துளியே உள்ளன. உடனே விண்ணப்பியுங்கள்...!

கடந்த வெள்ளிக்கிழமை 12ந் தேதி 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகியது. அதனைத் தொடர்ந்து மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. மறுகூட்டலுக்கு இன்றுடன் கால அவகாசம் முடிகிறது என அரசு தேர்வுகள் இயக்குனர் தண். வசுந்தரா தேவி அறிவித்துள்ளார்.

மேலும் இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெறும் தனித்தேர்வர்கள் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கு நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 22ந் தேதி மாலை 6 மணி வரை கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது.

விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்தையும், அறிவுரைகளையும் பதிவிறக்கம் செய்து தேர்வர் வசிக்கும் மாவட்டத்துக்கு அருகில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்துக்கு நேரடியாக சென்று தேர்வு கட்டணத்தை செலுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள். எனவும் அரசு தேர்வுகள் இயக்குனர் தண். வசுந்தரா தேவி அறிவித்துள்ளார்.

English summary
The Government Exams Director tan. vasundara devi announced Plus 2 to apply for a re-calculation will be completed by 5.00 pm today,

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia