சென்னையிலுள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் சேர விரைவில் பொதுவான ஆன்-லைன் விண்ணப்பம்!!

Posted By:

சென்னை: சென்னையிலுள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் சேர வசதியாக விரைவில் பொதுவான ஆன்-லைன் விண்ணப்பத்தைக் கொண்டு வரும் முயற்சியில் பள்ளிகள் இறங்கியுள்ளன.

சென்னையிலுள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் தங்களது குழந்தைகளைச் சேர்ந்த பெற்றோர் நீண்ட வரிசையில் நின்று விண்ணப்பங்களைப் பெற வேண்டியுள்ளது. இந்த நிலையைத் தவிர்க்க நகரிலுள்ள 100 சிபிஎஸ்இ பள்ளிகள் பொதுவான ஆன்-லைன் விண்ணப்பத்தைக் கொண்டு வருவதற்கான முயற்சியில் இறங்கியுள்ளன.

இதுகுறித்து பவன்ஸ் ராஜாஜி வித்யாஷ்ரம் பள்ளியின் மூத்த முதல்வர் அஜீத் பிரசாத் ஜெயின் கூறியதாவது: விரைவில் இந்த ஆன்-லைன் விண்ணப்பத்தைக் கொண்டு வரவுள்ளோம். அதற்கான தீவிரமான பணிகளில் ஈடுபட்டுள்ளன.

சிபிஎஸ்இ கிளஸ்டரில் வரும் 100 பள்ளிகளை இதில் சேர முடிவு செய்துள்ளோம்.

இதுதொடர்பாக அந்தப் பள்ளி நிர்வாகங்கள், முதல்வர்கள், பள்ளி உறுப்பினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

எங்கள் பள்ளியில் ஆன்-லைன் அப்ளிகேஷன் முறையை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் துவங்கினோம். இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது. ஆண்டுக்கு 1,400 பேர் ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கின்றனர் என்றார் அவர்.

English summary
With serpentine queues outside schools during the admission season becoming common, a few Central Board of Secondary Education (CBSE) schools are doing something to prevent this — they are working towards giving parents the additional option of applying online.Ajeeth Prasad Jain, Senior Principal of the Bhavan’s Rajaji Vidyashram and Secretary of the Chennai Sahodaya Schools Complex (CSSC) said that they were exploring the possibility of having a common online application system for over 100 CBSE schools in the city that are members of the CSSC cluster.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia