பிசியோதெரபி படிக்க உங்களுக்கு ஆசையா? அட்மிஷன், வேலைவாய்ப்பு தகவல்கள்..!

Posted By:

சென்னை : மக்களுக்கு ஏற்படும் உடல் இயக்க குறைபாடுகளை தீர்க்கும் விதமான தடுப்பு மற்றும் பயிற்சிகளை வழங்குவதே இம்மருத்துவத்தின் சிறப்பாகும். மனித உடலில் சரியான இயக்கம் மற்றும் செயல்பாடுகளை ஊக்குவிப்பதும், அவயங்களின் ஒழுங்கற்ற தன்மையை சீராக்குவதும் மிக முக்கிய பணியாகும்.

இம்மருத்துவத்தின் வாயிலாக நோயாளிகளுக்கு உடற்பயிற்சி முறைகளும் மற்றும் இதர தெரபி முறைகளையும் வழங்குகிறது. பிசியோதெரபி பயின்றவர்கள் எலும்புகள், நரம்புகள் மற்றும் தசைகள் பற்றிய முழு அறிவினை பெற்று சிகிச்சைகளை மேற்கொள்கின்றனர்.

மக்களுக்கு ஏற்படும் பிறவி குறைபாடுகள் விபத்து மூலமான பாதிப்புகள், நோய்கள் மூலம் சரிவர இயங்காத அவயங்களை நன்கு இயங்க செய்ய உதவுவதுடன், நல்ல நிலையில் எப்படி உடல் அவயங்கள் இயங்குமோ அந்த நிலைக்கு அவற்றை மீட்டு கொண்டு வரும் பணியில் ஈடுபடுகின்றனர்.

உடலில் ஏற்படும் ஆர்தரிடீஸ், ஸ்பான்டிலிடிஸ், நரம்பியல் குறைபாடுகள், இதய நோய்கள் போன்றவற்றிற்கு உடற்பயிற்சி மற்றும் சில தெரபிகள் மூலம் தீர்வுகள் அளிக்கப்படுகிறது. பக்கவாதம் மூலம் செயலிழந்த உடல்பாகங்களையும், உடல் ஊனமுற்றோருக்கும் தேவையான அடிப்படை பயிற்சிகள், தெரபிகளை வழங்குகின்றனர்.

பிசியோதெரபிஸ்ட்களின் மிக முக்கிய பணிகள்

பிசியோ தெரபி என்பது வெப்ப பாய்ச்சல், எலக்டிரிக் மற்றும் தண்ணீர் தெரபி, டயாதெரபி, தசைகளுக்கு என பிரத்யேக மசாஜ் போன்ற பலமுறைகளை கையாள்வதே ஆகும். பிசியோதெரபிஸ்ட் என்பவர் உடல் மாறுபாடுகளை கொண்ட நோயாளிகள் அதாவது நோய், வயது முதிர்வு, விபத்து, பிறவி குறைபாடு உள்ளவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்குபவராக உள்ளார். இந்நோயாளிகளின் உடல்பாதிப்புகளை சோதித்து அறிவதும் மற்றும் அதற்கான சிகிச்சைகளை அளிப்பதும் இவரது பணி, மருத்துவ திட்டங்களை வகுத்து உடற்பயிற்சியை செய்ய ஊக்குவிப்பது, அவயங்கள் நகர்வுக்கான சில தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது போன்றவற்றில் ஈடுபடுபவர். அறுவை சிகிச்சை, காயம், விபத்து, பக்கவாதம் போன்றவைகளுக்கு ஆளான நோயாளிகளுக்கு உதவியாளராக இவர் இருப்பார். இந்நோயாளிகளுடன் குறிப்பிட்ட நாட்கள் பயிற்சிகள், மசாஜ், தெரபி போன்றவைகளை வழங்கி அத்துடன் நோயாளிகள் தானாக மேற்கொள்ள வேண்டிய பயிற்சி முறைகளை கற்பிப்பதும் பிசியோதெரபிஸ்டின் முக்கிய பணியாக விளங்குகிறது.

பிசியோ தெரபிஸ்ட்

பிசியோ தெரபிஸ்ட் என்பவர் மருததுவ மனைகள், புனர்வாழ்வு மையங்கள் மற்றும் தனியாக கிளினிக்-களில் பணிபுரிபவராக உள்ளனர். நர்சிங் ஹோம்கள், தொழிற்சாலை மருத்துவ பிரிவுகள், பள்ளிகள், விளையாட்டு கூடங்கள் மற்றும் தனிப்பட்ட விளையாட்டு வீரர்களின் ஆலோசகராகவும் பணியில் ஈடுபடுகின்றனர்.

பிசியோதெரபி படிப்பில் சேருவதற்கான தகுதிகள்

பிசியோதெரபிஸ்ட் மூலமாகவோ உடல் அவயங்களில் ஏற்படும் இயக்க குறைபாடுகள் மற்றும் செயலிழப்பு சிறந்த முறையில் தீர்வுகளை காண்கின்றன.
பிசியோதெரபி படிப்புகளில் சேர்க்கை விதிகள் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு ஏற்ப மாறுபடுகின்றன. பொதுவாக பிளஸ்2வில் அறிவியல் பிரிவில் பயின்ற மாணவர்கள் இப்பாடபிரிவில் இணையலாம். பிசியோதெரபி படிப்பில் சிறந்த வகையில் பயில நினைப்போர் ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் உடல்நலன் மற்றும் இயக்க கல்விகளில் நல்ல அடித்தளத்தை பெற்றிருப்பது அவசியம்.

வேலை வாய்ப்பு


பிசியோதெரபி பட்டப்படிப்புகள் இளங்கலை நான்கு (B.P.I) ஆண்டு படிப்புகளாக வழங்கப்படுகிறது. மேலும் இதே பிரிவில் முதுகலை பட்டப்படிப்புகளும் உள்ளன. அரசு மற்றும் தனியார், கல்லூரிகள் பலவற்றிலும் இப்பட்டப்படிப்புகள் சிறப்புற வழங்கப்படுகிறது. இத்துறையில் பட்டப்படிப்பை முடித்தோர் பொது மருத்துவமனைகளில் பணியாற்றலாம். அதிநவீன தொழில்நுட்ப கருவிகளை கொண்ட விசேஷ மருத்துவமனைகள், எலும்பு மற்றும் நரம்பு சார்ந்த ஊனமுற்றோருக்கான சிகிச்சை மையங்கள், சேவை மையங்கள் போன்றவைகளில் பணி புரியலாம். தனிப்பட்ட முடநீக்கியல் மருத்துவ மையங்கள், கிளினிக்-களை சுய தொழிலாக தொடங்கி வருவாய் ஈட்டலாம். இத்துறைகளில் பிறபிரிவில் சிறப்பு கவனம் செலுத்தினால் அதில் ஞானம், அனுபவத்தை பெற்று நல்ல நிலையை அடையலாம்.

English summary
Above mentioned articles about physiotherapy course details, job opportunities and eligibility details .

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia