நீட் தேர்வு கடினம்... தமிழக மாணவர்கள் கருத்து..!

நீட் தேர்வில் இயற்பியல் வேதியியல் கேள்விகள் கடினமாக இருந்தன.

சென்னை : நீட் தேர்வில் இயற்பியல் வேதியியல், ஆகிய பகுதிகளில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகள் கடினமாக இருந்ததாக மாணவ மாணவியர்கள் கூறியுள்ளனர்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய மருத்துவ படிப்புகளில் சேர நீட் தேர்வு நேற்று நடைபெற்றது. இந்த தேர்வு காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வில் 180 கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தன. ஒவ்வொரு சரியான விடைக்கும் 4 மதிப்பெண் வீதம் மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு தேர்வில் கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.

தாவரவியல், விலங்கியல் பிரிவுகளில் கேள்விகள் எளிதாக இருந்தன. இயற்பியல் கேள்விகள் மட்டும் மிக சிரமமாக இருந்தன. கேள்விகள் பல கால்குலேசன் அடிப்படையில் கேட்கப்பட்டு இருந்தன. இயற்பியல் பிரிவில் பிளஸ்1 வகுப்பில் இருந்து 24 கேள்விகளும் 12வது வபகுப்பில் இருந்து 21 கேள்விகளும் கேட்கப்பட்டு இருந்தன.

 மாணவர்கள் கருத்து

மாணவர்கள் கருத்து

வேதியியல் பிரிவில் 11வது வகுப்பில் இருந்து 21 கேள்விகளும் 12வது வகுப்பில் இருந்து 24 கேள்விகளும் கேட்கப்பட்டிருந்தன. உயிரியல் பகுதியில் 11வது வகுப்பில் இருந்து 44 கேள்விகளும், 12வது வகுப்பில் இருந்து 46 கேள்விகளும் இடம் பெற்றிருந்தன. என தேர்வு முடிந்து வெளியே வந்த மாணவ-மாணவியர்கள் தெரிவித்துள்ளனர்.

 கடினமானத் தேர்வு

கடினமானத் தேர்வு

தமிழக அரசின் பாடத்திட்டத்தின் கீழ் பாடம் பயின்ற மாணவ மாணவியர்கள் தாவரவியல் விலங்கயில் பகுதிகளில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகள் பதில் அளிக்கும்படி இருந்தது. இயற்பியல், வேதியியல் போன்ற பகுதிகளில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகள் பதில் அளிப்பதற்குச் சற்றுக்கடினமாக இருந்தது என கூறியிருக்கிறார்கள்.நீட் தேர்வு நடத்தினால் இந்தியா முழுவதும் ஒரே பாட திட்டமாக அறிவிக்கப்பட வேண்டும். 90 சதவீதத்திற்கும் மேல் தமிழக பாடத்திட்டத்தில் படித்த மாணவ மாணவியர்கள் தேர்வு எழுதி உள்ளனர். அவர்களுக்கு நீட் தேர்வு கடினமானதாகவே இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

 கிராமப்புற மாணவர்கள்

கிராமப்புற மாணவர்கள்

நீட் தேர்வுக்கு பயிற்சி மையங்கள் நிறைய தோன்றிவிட்டன. ஆனால் பணக்கார மாணவர்கள் இது போன்ற கோச்சிங் கிளாசில் சேர்ந்துப் படிக்கிறார்கள். ஏழை மாணவர்களால் கோச்சிங் கிளாசில் சேர்ந்து படிப்பதற்கு முடியவில்லை. கிராமங்களில் பயிற்சி வகுப்புக்களே அவ்வளவாக இருப்பதில்லை. எனவே இந்தியா முழுவதும் ஒரே பாடத்திட்டத்தைக் கொண்டு வந்து அதன்பிறகு நீட் நடத்த வேண்டும் என மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எனவே வருகிற கல்வி ஆண்டில் நீட் தேர்வு வேண்டாம் என மாணவ மாணவியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தேர்வு முடிவு எப்படி இருக்கும்?

தேர்வு முடிவு எப்படி இருக்கும்?

மெட்ரிகுலேசன் பள்ளி மாணவர் ஒருவர் எங்கள் பள்ளியில் 11ம் வகுப்பு பாடங்களை ஆசிரியர்கள் நன்றாக நடத்தினர். நிறைய பள்ளிகளில் 11ம் வகுப்பு பாடங்கள் சரியாகவே நடத்தப்படுவதில்லை. அதனால்தான் மாணவர்களுக்கு தேர்வு சற்று கடினமானதாகவே இருந்தது. 11ம் வகுப்பு பாடத்திட்டத்தில் இருந்து நிறைய கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தன. ஆனால் இயற்பியல் வேதியில் பகுதிகளில் சற்றுக் கடினமான கேள்வியே கேட்கப்பட்டிருந்தது. தாவரவியல் மற்றும் விலங்கியல் பகுதிகளில் கேள்விகள் பதில் அளிக்கக் கூடியதாக இருந்தது.

தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வு சற்றுக் கடினமானதகவே இருந்தது. தமிழக மாணவர்களின் டாக்டர் கனவுகள் பலிக்குமா என ஜூன் 8ம் தேதி வெளியாகும் நீட் தேர்வு முடிவுதான் நிர்ணயிக்கும். மத்திய அரசு தமிழக மாணவர்களின் டாக்டர் கனவை கேள்விக்குறியாக்கி உள்ளது.

 

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
students have said that the questions asked from physics and chemistry in the examination were difficult.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X