என்ஜினீயரிங் படிச்சிருக்கீங்களா.. மின்சார நிறுவனத்தில வேலை.. உடனே அப்ளை பண்ணுங்க!

Posted By:

சென்னை: இந்திய மின் தொகுப்புக் கழக நிறுவனத்தில் (பிஜிசிஐஎல்) கேட் 2017ம் ஆண்டு தேர்வின் அடிப்படையில் எக்சிகியூட்டிவ் டிரெயினி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், சிவில், கம்ப்யூட்டர் சயின்ஸ் போன்ற பிரிவுகளில் காலிப் பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

என்ஜினீயரிங் படிச்சிருக்கீங்களா.. மின்சார நிறுவனத்தில வேலை..  உடனே அப்ளை பண்ணுங்க!

எலக்ட்ரிக்கல் - 103 காலியிடங்கள்

எலக்ட்ரானிக்ஸ் - 15 காலியிடங்கள்

சிவில் - 15 காலியிடங்கள்

கம்ப்யூட்டர் சயின்ஸ் - 19 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி -

பி.இ., பி.டெக்., பி.எஸ்சி., இளநிலை பட்டப்படிப்பில் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், பவர், பவர் சிஸ்டம்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ், அண்ட் கம்யூனிகேசன், டெலிகம்யூனிகேசன், கம்ப்யூட்டர் என்ஜினீயரிங், இன்பர்மேசன் டெக்னாலஜி போன்ற பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் குறைந்தப்டசம் 65% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விண்ணப்பதாரர்கள் கேட் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் குரூப் டிஸ்கசன் மற்றும் நேர்க்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். குரூப் டிஸ்கசன் மற்றும் நேர்க்காணலுக்கு அழைக்கப்படுபவர்களில் தகுதியானவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியில் அமர்த்தப்படுவார்கள்.

வயது வரம்பு -

விண்ணப்பதாரர்கள் 28 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எஸ்.சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்புச் சலுகை அளிக்கப்படுகிறது.

விண்ணப்பக்கட்டணம் -

விண்ணப்பக்கட்டணம் ரூ. 200 அனைத்து விண்ணப்பதாரர்களிடமிருந்தும் வசூலிக்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை -

விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் இணையதள வழியாக 31 மார்ச் 2017ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.

மேலும் தகவல் அறிய www.powergridindia.com என்ற இணையதள முகவரியை அனுகவும்.

English summary
Power Grid Corporation of India Limited has announced that work for engineering graduate. gate exam eligible candidates are apply this post.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia