பவர் ஃபைனான்ஸ் கார்ப்பொரேஷனில் வேலை செய்ய ஆசையா?

Posted By:

சென்னை: பவர் ஃபைனான்ஸ் கார்ப்பொரேஷன் (பிஎஃப்சி) நிறுவனத்தில் உதவி மேலாளர் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசு நடத்தும் நிறுவனமான பவர் ஃபைனான்ஸ் கார்ப்பொரேஷன் 1986-ல் தோற்றுவிக்கப்பட்டது.

இந்தப் பணியிடங்களுக்கு டிசம்பர் 28-ம் தேதிக்குள் ஆன்-லைனில் விண்ணப்பம் செய்யவேண்டும். மேலாளர், துணை மேலாளர், உதவி மேலாளர், ஜூனியர் அக்கவுண்டன்ட், டிரான்ஸ்லேட்டர், டிரைவர் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாகவுள்ளன.

பவர் ஃபைனான்ஸ் கார்ப்பொரேஷனில் வேலை செய்ய ஆசையா?

இந்தப் பணியிடங்களுக்கான கல்வித் தகுதி, அனுபவம் போன்ற விவரங்களுக்கு www.pfcindia.com என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம்.

மேலும் விண்ணப்பங்களை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து Senior Manager (HR), Power Finance Corporation Limited, 1, Urjanidhi, Barakhamba Lane, New Delhi - 110001 என்ற முகவரிக்கு 2016-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதிக்குள் அனுப்பவும் வேண்டும். ஆன்-லைனில் விண்ணப்பித்த பிறகு இதைச் செய்யவேண்டும்.

மேலும் விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 செலு்தவேண்டும். எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினருக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia