பெரியார் பல்கலைக்கழகத்தில் ரிசர்ச் பெல்லோஷிப் பணி

Posted By:

சென்னை: பெரியார் பல்கலைக்கழகத்தில் மொத்தம் 61 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி -

நூலகம் மற்றும் தகவல் அறிவியல், மண்ணியல், கணிதம், மைக்ரோபயாலஜி, தாவரவியல், ஜவுளி, உணவுத் தொழில்நுட்பம், பயோடெக்னாலஜி, பயோ கெமிஸ்ட்ரி, வரலாறு, இயற்பியல், நானோ சயின்ஸ், சுற்றுச்சூழல் அறிவியல், உளவியல் உள்ளிட்ட 21 பிரிவுகளில் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்துப் பிரிவிலும் முதுகலைப் பட்டம் மற்றும் அதற்கு மேல் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பெரியார் பல்கலைக்கழகத்தில் ரிசர்ச் பெல்லோஷிப் பணி

அனுபவம் - நூலகம் மற்றும் தகவல் அறிவியல், மண்ணியல், கணிதம், மைக்ரோபயாலஜி, தாவரவியல், ஜவுளி, உணவுத் தொழில்நுட்பம், பயோடெக்னாலஜி, பயோ கெமிஸ்ட்ரி, வரலாறு, இயற்பியல், நானோ சயின்ஸ், சுற்றுச்சூழல் அறிவியல், உளவியல் 21 பிரிவுகளிலும் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை -

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். விருப்பம் உள்ளவர்கள் ரூ. 200 கட்டணத்தை டி.டியாக இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை www.periyaruniversity.ac.in என்ற இணையதள முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து அத்துடன் தேவையான சான்றிதழ்களை இணைத்து கீழே உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பப்படிவம் அனுப்ப வேண்டிய முகவரி

பதிவாளர்
பெரியார் பல்கலைக்கழகம்,
பெரியார் பல்கலை நகர்,
சேலம் - 636011.

மேலும் விபரங்கள் அறிய www.periyaruniversity.ac.in என்ற இணையதள முகவரியை அனுகவும்.

English summary
Periyar University Research Fellowship vacancy 2017. Apply for Master's graduates.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia