சென்னை: இந்திய நாடாளுமன்றத்தில் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் பணியிடம் காலியாக இருப்பதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
தகுதியும், திறமையும் உள்ளவர்கள் இந்தப் பணியிடத்துக்கு டிசம்பர் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.

இந்தப் பணியிடத்துக்கு பட்டப் படிப்பை, அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம், பல்கலைக்கழகத்திலிருந்து பெற்றிருக்கவேண்டும். மேலும் தொலைக்காட்சி, திரைத்துறையில் 15 ஆண்டு கால அனுபவம் பெற்றிருக்கவேண்டும். மேலும் தயாரிப்பு நிகழ்ச்சி, செய்திப்படத் தயாரிப்பில் 5 ஆண்டு அனுபவம் பெற்றிருக்கவேண்டும். ஸ்டுடியோ நிர்வாகம், நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சிகளில் அனுபவம் இருக்கவேண்டும்.
தகுதியும், திறமையும் உள்ளவர்கள் தகுந்த ஆவணங்களுடன் டிசம்பர் 31-ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யவேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு http://parliamentofindia.nic.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.


Click it and Unblock the Notifications

