Pariksha Pe Charcha 2020: பிரதமர் மோடியுடன் கலந்துரையாட ஓர் வாய்ப்பு!

மாணவ, மாணவிகள் தேர்வு எழுதும்போது சந்திக்கும் பிரச்சனைகளை போக்கவும், அவர்களது வளர்ச்சியை முன்னிறுத்தும் வகையில் பரிக்சா பி சர்ச்சா என்னும் போட்டி நடைபெறவுள்ளது.

மாணவ, மாணவிகள் தேர்வு எழுதும்போது சந்திக்கும் பிரச்சனைகளை போக்கவும், அவர்களது வளர்ச்சியை முன்னிறுத்தும் வகையில் பரிக்சா பி சர்ச்சா என்னும் போட்டி நடைபெறவுள்ளது. இதில் தேர்ச்சி பெறும் மாணவ, மாணவியர் பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடலாம்.

Pariksha Pe Charcha 2020: பிரதமர் மோடியுடன் கலந்துரையாட ஓர் வாய்ப்பு!

இதுகுறித்து, மோடி, தனது டிவிட்டர் பக்கத்தில் 'Exams are approaching and so is Pariksha Pe Charcha!' என்னும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

பரிக்சா பி சர்ச்சா

பரிக்சா பி சர்ச்சா

இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், மனவழுத்தம் இல்லாத தேர்வுச்சூழலை உருவாக்க இணைந்து செயல்படுவோம் என தெரிவித்துள்ளார். இந்த போட்டித் தேர்வுக்கு பரிக்ஷா பே சர்ச்சா என பெயரிடப்பட்டுள்ளது. ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் இந்த போட்டியில் பங்கேற்கலாம்.

பிரமதரிடம் கேள்வி கேட்கலாமா?

பிரமதரிடம் கேள்வி கேட்கலாமா?

இப்போட்டியில் பங்கேற்பாளர்களுக்கு சில கேள்விகள் கொடுக்கப்பட்டிருக்கும். இதில், 5 தலைப்புகளில் 1500 எழுத்துகளில் தங்கள் கருத்தை வெளிப்படுத்த வேண்டும். பங்கேற்பாளர்கள் பிரதமரிடம் தாங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை 500 எழுத்துகளில் தெரிவிக்கலாம். இதில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு தனித்திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படும். மேலும், மோடியுடன் கலந்துரையாடுவதற்கான வாய்ப்பும் அளிக்கப்படும் என அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

2019 பரிக்சா பி சர்ச்சா 2.0
 

2019 பரிக்சா பி சர்ச்சா 2.0

நடப்பு ஆண்டிற்கான பரிக்சா பி சர்ச்சா நிகர்ச்சி கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது. பரிக்சா பி சர்ச்சா 2 பாய்ண்ட் ஓ (Parksha pe charcha 2.0) என்னும் தலைப்பில் தில்லியில் நடைபெற்ற இதில், பங்கேற்ற மோடி பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுடன் உரையாடினார்.

என் முன் எதிர்கால இந்தியா..!

என் முன் எதிர்கால இந்தியா..!

அந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, எதிர்கால இந்தியா என கருதப்படும் மாணவர்கள் முன் நின்று நான் பேசுகிறேன். இங்கு நான் உத்தரவிட வரவில்லை. கலந்துரையாடவே வந்துள்ளேன். எதிர்கால இந்தியாவே என் முன் உள்ளது. தேர்வு என்பது நம்மைச் செம்மைப்படுத்திக்கொள்ளவும், வளர்க்கவும் உதவும். தேர்வைக் காட்டிலும், வாழ்க்கை முக்கியமானது. பள்ளி தேர்வுகள் என்பது பெரிய சவால் அல்ல. தேர்வின் தோல்வியை வாழ்க்கையின் முடிவாகக் கருத வேண்டாம் என்றார்.

தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்

தொடர்ந்து பேசிய அவர், தொழில்நுட்பத்தில் நன்மையும், தீமையும் உள்ளது. அதனை, நம் வளர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். தங்களது குழந்தைகள் தொழில்நுட்பத்தை எப்படிப் பயன்படுத்துகின்றனர் என்பதில் பெற்றோர் கவனம் செலுத்த வேண்டும். வெளியில் சென்று விளையாடுவதை நமது வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாற்ற வேண்டும். மாணவர்கள் குறுகிய மற்றும் நீண்ட கால இலக்குகள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஸ்ட்டேட்டஸ் அப்டேட்..!

ஸ்ட்டேட்டஸ் அப்டேட்..!

தற்போது அரங்கத்தில் இருப்பவர்கள் சிலர் தமது பேச்சைக் கேட்டுக் கொண்டுள்ளனர். வேறு சிலரோ, தாம் பிரதமர் மோடியுடன் நிகழ்ச்சியில் இருப்பதாக நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் சமூகவலைத்தளங்கள் மூலம் அப்டேட் செய்து கொண்டிருக்கின்றனர் என மாணவர்கள் மத்தியில் நகைச்சுவையுடன் பிரதமர் பேசினார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Pariksha Pe Charcha 2020: Narendra Modi announces contest for students to interact with PM
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X