சம்மர் கிளாசுக்கு அனுப்பும் பெற்றோர்களே... இதை கொஞ்சம் படிங்க...!

Posted By:

சென்னை : சில பெற்றோர்கள் லீவு நாட்களிலும் தங்கள் குழந்தைகளை ஃபிரியா விளையாட விடாமல் சம்மர் வகுப்புக்களில் சேர்த்து விடுகிறார்கள். சம்மர் கிளாஸ் பற்றி தெரிந்து கொண்டு சேர்ப்பது நல்லது.

பெற்றோர்கள் குழந்தைகளுக்கு லீவு விட்ட உடனேயே அவர்களை சம்மர் கிளாசில் கொண்டு சேர்த்துவிடுகின்றனர். சென்னை போன்ற பெரும் நகரங்களில் பெற்றோர்கள் இருவருமே வேலைக்குச் செல்வதால் அவர்கள் குழந்தைகளை கொண்டு லீவு நாட்களிலும் வகுப்புகளுக்கு அனுப்பி விடுகிறார்கள்.

இதுதான் சாக்குன்னு சம்மர் கிளாஸ் நடத்துகிறவர்களும் பெற்றோர்களிடம் பணத்தை பறித்துக் கொள்கிறார்கள். தங்கள் குழந்தைகளை சம்மர் கிளாஸ் அனுப்பும் பெற்றோர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது.

 சம்மர் கிளாசுக்கு அனுப்பும் பெற்றோர்களே... இதை கொஞ்சம் படிங்க...!

1. சம்மர் கிளாசுக்கு உங்கள் குழந்தைகளை அனுப்புவதற்கு முன்பு குழந்தைக்கு விருப்பம் உள்ளதா என தெரிந்து கொண்டு அனுப்புங்கள்.

2. குழந்தைக்கு என்ன செய்ய விருப்பமோ அது சம்பந்தப்பட்ட நல்ல சம்மர் வகுப்புக்களை தேர்ந்தெடுத்து அனுப்புங்கள். அவங்க பிரண்ட் சம்மர் கிளாசுக்கு போறாங்கன்னு நீங்களும் விருப்பம் இல்லாத உங்க குழந்தையை சம்மர் கிளாசுக்கு அனுப்பாதீங்க.

3. சம்மர் கிளாசில் எவ்வளவு குழந்தைகள் சேர்ந்து இருக்கிறார்கள். இட வசதி போதுமானதாக உள்ளதா, குழந்தைகள் ஃபிரியா இருக்காங்களா என தெரிந்து கொண்டு சேருங்கள்.

4. சம்மர் வகுப்புகளில் மற்றவர்களால் குழந்தைகளுக்கு எந்த வித தொந்தரவும் இருக்கிறதா என்பதை குழந்தையிடம் கேட்டு தெரிந்து கொண்டு தொடர்ந்து அனுப்புங்கள்.

5. சம்மர் கிளாசு உனக்கு பிடிச்சிருக்கா அங்க என்ன சொல்லித்தர்றாங்கன்னு டெய்லியும் உங்கள் குழந்தைகளை விசாரியுங்கள். குழந்தைகள் அதிகமாக அன்புக்காக ஏங்குபவர்கள்.

6. சிசி டிவி கேமரா போன்ற வசதிகள் உள்ளதா, குழந்தைகள் வெளிப்படையாக நடத்தப்படுகிறார்களா, நல்ல காற்றோட்டமான இடமாக உள்ளதா, சுதந்திரமாக உள்ளார்களா, குழந்தைகள் சந்தோசமாக சம்மர் வகுப்புக்களுக்கு போறாங்களா என்பதை தெரிந்து கொண்டு அனுப்புங்கள்.

7. குழந்தைப் பருவம் கிடைப்பதற்கரிய பருவம் குழந்தை பருவத்தில் அவர்களை குழந்தைகளாக வாழ விடுங்கள். அவர்கள் குழந்தைப் பருவத்தை கொலை செய்யாதீர்கள்.

8. அறிவு வளரனும் என்பதற்காக அவர்களை ரூமில் அடைச்சு சம்மர் கிளாசுன்னு கொடுமைப்படுத்துற இடங்களுக்கு அனுப்பாதீர்கள். குழந்தைகளை சுதந்தரமாக இருக்க விடுங்கள் அவர்களிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள். கட்டாயமாக அவர்கள் அறிவோடு வளருவார்கள்.

9. குழந்தைகளை ஆலயங்களுக்கு அழைத்து செல்லுங்கள். கடவுள் பக்தி பயத்தை அவர்களுக்குள் விதையுங்கள். லீவு நாட்களில் சிறு சிறு வீட்டு வேலை கற்றுக் கொடுங்கள்.

10. அவரவர் வயதிற்கு ஏற்றவாறு குழந்தைகளை வீட்டில் சிறு சிறு வேலையை செய்ய வையுங்கள். விளையாட விடுங்கள். சுதந்திரமாக இருக்க விடுங்கள். நல்ல சமுதாய சிந்தனைகளை விதையுங்கள். நீங்கள் விதைக்கும் நல்ல விதைகள் நாளைக்கு பெரிய விருச்சமாக வளர்ந்து அநேகருக்கு பயனுள்ளதாக அமையும்.

English summary
Some parents leave their children to play in the Summer Classes without having to play with their children during the levay days.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia