யாருமே இல்லையா உங்களுக்கு.. கவலை வேண்டாம் பி.எஸ்.ஜி அறநிலை மாணவர் இல்லம் இருக்கு!

சென்னை : பி.எஸ்.ஜி அறநிலைய மாணவர் இல்லத்தில் தாய் தந்தை இல்லாத மாணவர்களுக்கு இலவச கல்வி, தங்குமிடம், உணவு சீருடை, மருத்துவ வசதிகள் செய்து தரப்படுகிறது. .

தாய் தந்தை இல்லாத மாணவ மாணவியர்களுக்கு உதவும் வகையில் பி.எஸ்.ஜி அறநிலைய மாணவர் இல்லம் செயல்பட்டு வருகிறது.

யாருமே இல்லையா உங்களுக்கு.. கவலை வேண்டாம் பி.எஸ்.ஜி அறநிலை மாணவர் இல்லம் இருக்கு!

 

ஆதரவு இல்லாத குழந்தைகள் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை இலவசக் கல்வி பெறுவதற்கான வழிவகைகளை பி.எஸ்.ஜி அறநிலைய மாணவர் இல்லம் செய்து தருகிறது.

இலவசக் கல்வி

11ம் வகுப்பிலும் தமிழ் வழியில் கற்க விரும்பும் ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. கல்லூரி படிப்பு வரை மாணவ மாணவியர்களுக்கு இலவசமாகவே கல்வி வழங்கப்படுகிறது.

இலவச பயிற்சி

தங்குமிடம், உணவு, சீருடை, மருத்துவ வசதி, எழுது பொருட்கள், கணிணிப் பயிற்சி மற்றும் விளையாட்டு பயிற்சி ஆகிய பயனுள்ள பயிற்சிகளும் மாணவர்களுக்கு இலவசமாகக் கொடுக்கப்படுகிறது. மாணவர்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்கிறது பி.எஸ்.ஜி அறநிலைய மாணவர் இல்லம்.

விண்ணப்பங்கள்

பி.எஸ்.ஜி அறநிலைய மாணவர் இல்லத்தில் சேர விருப்பமும் தகுதியும் உள்ள மாணவ மாணவியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஏப்ரல் 5 முதல் ஏப்ரல் 26 வரை வரவேற்கப்படுகின்றன. நிரப்பப்பட்ட விண்ணப்பங்கள் 29 ஏப்ரல் 2017ம் தேதி வரை பெற்றுக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேர்முகத் தேர்வு 10 மே 2017ம் தேதி நடைபெறும். அதில் தகுதியான மாணவ மாணவியர்கள் பி.எஸ்.ஜி அறநிலை மாணவர் இல்லத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி

செயலர் அலுவலகம்,

பி.எஸ்.ஜி சர்வஜன மேல்நிலைப்பள்ளி,

பீளமேடு,

கோயம்புத்தூர் - 641 004

தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் - 0422-2572310, 99448 65628, 98947 59942.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
P.S.G Charity Students Home. Unaccompanied children will be admitted. All of the information provided above. Address and Contact details clearly mentioned.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X