முதுநிலை மருத்துவ நுழைவுத் தேர்வு முடிவுகள் ரிலீஸ்!!

Posted By:

சென்னை: முதுநிலை மருத்துவ படிப்புகளில் சேர உதவும் நுழைவுத் தேர்வுகளுக்கான முடிவுகள் நேற்று வெளியாகின..

தமிழகத்தில் முதுநிலை, முதுநிலை பட்டயம், ஆறு ஆண்டுகள் நரம்பியல் அறுவைச் சிகிச்சை, முதுநிலை பல் மருத்துவம் ஆகியவற்றில் 2016-17-ஆம் ஆண்டுக்கான மாநில அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான நுழைவுத் தேர்வு பிப்ரவரி 14-ஆம் தேதி நடைபெற்றது. இந்தப் படிப்புகளில் சேர்வதற்காக ஏராளமானோர் விண்ணப்பித்து இருந்தனர்.

முதுநிலை படிப்புகளுக்கு 1163 இடங்கள், முதுநிலை பல் மருத்துவப் படிப்புக்கு 40 இடங்கள் என மொத்தம் 1,203 இடங்களுக்குத் தேர்வு நடைபெற்றது.

இத்தேர்வுக்கு மொத்தம் 11,438 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இந்த நுழைவுத் தேர்வில் 11,067 பேர் பங்கேற்றனர். அதில் 9,994 பேர் முதுநிலை மருத்துவப் படிப்புக்காகவும், 1,073 பேர் முதுநிலை பல் மருத்துவப் படிப்புக்காகவும் விண்ணப்பித்து இருந்தனர்.

சென்னையில் ஐந்து மையங்களில் இந்த நுழைவுத் தேர்வு நடைபெற்றது. தேர்வுக்கான முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன. சுகாதாரத் துறையின் www.tnhealth.org என்ற இணையதளத்தில் முடிவுகளை இப்போது காணலாம்.

தேர்வர்கள் தங்கள் தேர்வு எண்ணை இணையதளத்தில் பதிவு செய்து முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம்.

English summary
Entrance exams results for the P.G. Medical Courses has announced yesterday.. Aspirants can logon into www.tnhealth.org for the results.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia