'நாடு முழுவதும் 8 லட்சம் என்ஜினீயரிங் படிப்புகள் காலி'

Posted By:

சென்னை: 2014-15-ம் கல்வியாண்டில் நாடு முழுவதும் 8 லட்சம் என்ஜினீயரிங் படிப்பு இடங்கள் காலியாக இருந்தன என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இத்தகவலை மக்களவையில் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார். இதுதொடர்பாக மக்களவையில் அவர் மேலும் கூறியதாவது:

'நாடு முழுவதும் 8 லட்சம் என்ஜினீயரிங் படிப்புகள் காலி'

என்ஜினீயரிங் படிப்புக்கான இடங்கள் கூடுதலாக இருக்கின்றன. ஆனால் அரசு கல்லூரிகள் மற்றும் மதிப்புமிக்க தனியார் கல்வி நிறுவனங்களில் இந்த இடங்களுக்கு போட்டி அதிகமாக இருக்கிறது.

2014-15-ம் கல்வியாண்டில் மொத்தம் 8,44,328 என்ஜினீயரிங் படிப்புகள் காலியாக இருந்தன.

ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு மூலம் உயர் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

கல்வி விருதுகள் வழங்குவதற்காக கல்லூரிகளின் பரிந்துரை, உண்மைத்தன்மை பற்றி ஆராய தேசிய கல்வி டெபாசிட்டரி அமைப்பை அமைக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது என்றார் அவர்.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia